தமிழ் இலக்கியம் இவ்வுலகம் சார்ந்தது – தமிழண்ணல்

தமிழ் இலக்கியம் இவ்வுலகம் சார்ந்தது   பிற உலகத்தொன்மை இலக்கியங்கள் யாவும் மேலுலகக் கடவுளர் பற்றியனவாகவும், அம்மேலுலகினர் கீழே இறங்கி வந்து தெய்வத் தன்மை அல்லது அசுரத் தன்மையுடையவர்களுடன் கலந்து இடம் பெற்றனவாகவுமே முற்றிலும் காணப்படும். தமிழர்தம் தொன்மைக் குறிப்புகள் இவ்வுலகம் சார்ந்து, தெய்வத்தன்மை உற்றன பற்றியன. இவ்வுலகினராய் ‘வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வமாகியவர்’ பற்றியன. மேலிருந்து கீழே வந்தவர் பற்றியனவாகாமல், கீழேயிருந்து மேலே சென்றவர் பற்றியன. கண்ணகி, மணிமேகலை மட்டுமின்றி, ‘தமிழர் தேசியக் காப்பியம்’ எனச் சமயப் பெரியோரால் போற்றப்பட்ட பெரியபுராணமும் கீழிருந்து…

காலந்தோறும் முருகன் – பன்னாட்டுக் கருத்தரங்கம்

பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி (தன்னாட்சி), புதுச்சேரி மயிலம் பரிமளவேல் தமிழ் உயராய்வு மையம் தமிழ் இலக்கியங்களில் காலந்தோறும் முருகன் பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கம் மார்கழி 6, 2045 / திசம்பர் 21, 2014 காலை 9.30 முதல் மாலை 4.30

வாசிங்டன் சிறப்புத் தமிழ் இலக்கியக் கூட்டம்

பிப்பிரவரி 16-இல் வாசிங்டன் பகுதியில் நடந்த சிறப்புத் தமிழ் இலக்கியக் கூட்டமான “தமிழ் இலக்கியத்தில் சமயம்” மிகவும் நன்றாக நடந்து முடிந்தது. பேராசிரியர் மறைமலை இலக்குவனார் ”இமயம் முதல் குமரி வரை முருகன் வழிபாடு” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். இந்தக் கூட்டத்தில் பேராசிரியர் வாசு அரங்கநாதன் சித்தம் பற்றித் ”திருமூலரும் எட்மண்ட் கூசெரியும்” (Edmund Husseri) தலைப்பில் நல்லதொரு உரை ஆற்றினார்கள்.                              …