நம் எண்களை அறியாமல் இருக்கலாமா?   தமிழ் எண்கள் என்றால் என்ன? தமிழர்களாகிய நாம் தமிழில் பயன்படுத்தும் எண்கள்தாம் தமிழ் எண்கள். அப்படி என்றால் இப்பொழுது பயன்படுத்தி வரும் 1,2,3, முதலான வரிசை எண்கள் தமிழ் இல்லையா?  அரபி எண்கள் என்று சொல்லப்பட்டாலும் தமிழ் எண்களில் இருந்து உருவான அவை உலக எண்களாக மாறி விட்டன. அப்படி என்றால் அவற்றைப் பயன்படுத்தினால் என்ன தவறு? அவற்றைப் பயன்படுத்தினாலும் நம் மொழிக்குரிய நம் எண்களைப் புறக்கணிக்கக் கூடாது அல்லவா? பிற மொழியினர் அவ்வாறு தத்தம்…