திருவள்ளுவர் நினைவுநாள் – திருச்சிராப்பள்ளி
நண்பர்களே! வணக்கம். மாசி 13, 2047 / 25.02.2016 மாலை, 6.00 மணி திருச்சி பெரியசாமி வணிகவளாகம், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் திருவள்ளுவர் நினைவுநாள் நிகழ்வு. திருவள்ளுவர் மறைந்த நாளாக மாசித்திங்கள் உத்தர நட்சத்திரம் கருதப்படுகிறது. தலைமை: திருக்குறள் சு முருகானந்தம் முன்னிலை: முனைவர் ச திலகவதி, இலக்கியத்துறைத்தலைவர் தமிழ்ப்பல்கலைக் கழகம், தஞ்சாவூர். அகத்தியர் புத்தகசாலை கோபாலகிருட்டிணன். சிறப்புரை : இ.சூசை தலைப்பு : பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். என். நிசவீரப்பா. காங்கிரசு தலைமைக்கழகப் பேச்சாளர் தலைப்பு : நவில்தோறும் நூல்நயம் வரவேற்பு: இரா…
தாய்மொழிநாள் உரை – தமிழ் சூசை
இனிய நண்பர்களே! மாசி 09, 2047 – 21 02 2016 பிற்பகல் 3.00 மணிக்குத் திருச்சிராப்பள்ளி தூய பவுல்இறையியல் கல்லூரியில் பாவாணர் தமிழியக்கக் கூட்டம் தலைப்பு : “தாய்மொழிநாள்” பன்னாட்டு மன்றம் (U.N.O) அறிவித்தநாள். வங்காளர்கள் பங்களாதேசத்தில்தாய்மொழிக்காக உயிர் நீத்தநாள். தாய்மொழி உணர்வு தாய்மொழிவழிக்கல்வி உலகத்தாய்மொழிக்காப்பு போர்கள். இந்தி எதிர்ப்புப்போர்பற்றிய என்(இ.சூசை) உரை . நண்பர்கள், மாணவர்கள் வருக! வருக! இ.சூசை
சதுரகராதி அறிமுக உரை – தமிழ் சூசை
இனிய நண்பர்களே, வணக்கம். எதிர்வரும் சனிக்கிழமை மாலை 5 30. மணி, மாசி 08, 2047 – 20 02 2016 திருவரங்கம் இராசவேலர் செண்பகத்தமிழரங்கில் இலக்கணத்தொடரில் சதுரகராதி அறிமுக உரை உள்ளது. உரிச்சொல் பனுவல் காலம், நிகண்டுகாலம், அகராதிகாலம், சதுரகராதி அமைப்பு, சதுரகராதி சிறப்பு என உரை தயாரித்து உள்ளேன். வாய்ப்புள்ள மாணவர்கள், நண்பர்கள் வருக! – தமிழ் சூசை
வீரமாமுனிவரின் ‘கிளாவிசு’ நூலின் மொழிபெயர்ப்பு நூல் வெளியீடும் கருத்தரங்கமும்
தை 27, 2047 / 11 பிப், 2016இல் ஏலாக்குறிச்சியில் கருத்தரங்கும் நூல்வெளியீட்டு விழாவும் நடைபெறஉள்ளன . ‘கிளாவிசு’ என்னும் இலத்தீன் சொல் சாவியைக்குறிக்கும்; உயர்தமிழ்இலக்கியத் திறவுகோலாக இப்பெயரில் வீரமாமுனிவர் இலத்தீனில் எழுதிய சிறந்த தமிழ்இலக்கணம்; இதனை இதுவரை யாரும் தமிழில் மொழிபெயர்க்கவில்லை. முதுமுனைவர் ச. இராசமாணிக்கம் என்ற துறவி ஆங்கிலத்தில் பெயர்த்தார். வெளிவரவில்லை. நான் தமிழில் எழுத்ததிகாரம் மட்டும் ஆய்வுரையுடன் மொழிபெயர்த்துள்ளேன். இந்நூல் அன்று வெளியிடப்பெறுகிறது. கருத்தரங்கில். மூதறிஞர் செ வை சண்முகம், முனைவர் பா வளனரசு, முனைவர் திலகவதி,…