இலக்குவனார் நெறியுரைக்கிணங்கத் தமிழ்நல அரசை அமைக்கட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
கற்றறிந்த தமிழ்ப்புலவர்கள் வழி நடைபெறும் அரசு சிறப்புற்று ஓங்கும். தமிழ்ப்புலவர்கள் என்று கூறுவதன் காரணம், சங்கக்காலத்தில் தமிழ்ப்புலவர்கள் வழி அரசுகள் நடைபெற்றதால் சங்கக்காலம் பொற்காலமாகத் திகழ்ந்தது. இன்றைய தமிழ்ப்புலவர்கள், நடுநிலைமை உணர்வுடனும் துணிவுடனும் அரசிற்கு அறிவுரை கூறுவோர் அருகியே உள்ளனர். கட்சிச் சார்பற்று ஆன்றோர்கள் அறிவுரை கூறினாலும் கட்சிக் கண்ணோட்டத்துடன் கூறுவதாகக் கருதி அவற்றைப் புறக்கணிக்கும் போக்கே உள்ளது. யார் அறிவுரை கூறினாலும் அரசிற்கு எதிரான கருத்துகள் என்று புறந்தள்ளாமல் நல்லாட்சிக்கான வழிகாட்டி என்று ஏற்பார்கள் எனக் கருதுகிறோம். எனவே, தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர்…