தமிழ் நூல்கள் எவ்வாறு மறைந்தன? 4/4 : மயிலை சீனி.வேங்கடசாமி
(தமிழ் நூல்கள் எவ்வாறு மறைந்தன? 3/4 தொடர்ச்சி) மறைந்துபோன தமிழ் நூல்கள் 4/4 அயலார் படையெடுப்பு அரசர்களின் போரினாலும் புத்தகசாலைகள் அழிக்கப்பட்டு அருமையான நூல்கள் மறைந்துபோய்விட்டன. சேர சோழ பாண்டிய அரசர்கள் தமது அரண்மனைகளில் நூல் நிலையங்களை அமைத்திருந்தனர். அவர்களுக்குள் அடிக்கடி போர்கள் நிகழ்ந்தன. அப்போர்களில், ஒருவர் நகரத்தை மற்றவர் கைப்பற்றியதும் உண்டு. ஆனால், அவர்களினால் நூல்நிலையங்கள் அழிக்கப்படவில்லை. ஏனென்றால், அவர்கள் தமிழர்கள்; தமிழரசர்கள் தமிழ் நூல் நிலையங்களை அழிப்பது மரபல்ல: மாறாகப் போற்றினார்கள். தமிழரல்லாத வேற்றரசர்கள், தமிழ் நாட்டில் வந்து போர்…
தமிழ் நூல்கள் எவ்வாறு மறைந்தன? 3/4 : மயிலை சீனி.வேங்கடசாமி
(தமிழ் நூல்கள் எவ்வாறு மறைந்தன? 2/4 தொடர்ச்சி) தமிழ் நூல்கள் எவ்வாறு மறைந்தன? 3/4 செல் அரித்தல் நமது நாட்டுக்குச் சாபக்கேடாக இயற்கையில் அமைந்துள்ள சிதல் என்னும் பூச்சிகள், ஏட்டுச் சுவடிககளுக்குப் பெரும்பகையாக இருக்கின்றன. வன்மீகம் என்றும், செல் என்றும் பெயர்பெற்ற எறும்பு இனத்தைச் சேர்ந்த இப்பூச்சிகள் துணிமணிகள், மரச்சாமான்கள் முதலியவற்றை அரித்துவிடுவது போலவே, ஏட்டுச் சுவடிகளையும் தின்று அழித்துவிட்டன. இப்படி அழித்த சுவடிகளுக்குக் கணக்கில்லை. அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூன்று சிவனடியார்கள் இயற்றிய தேவாரப் பதிகங்களில் நூறாயிரம் பதிகங்களுக்குமேல் செல்லரித்து…
தமிழ் நூல்கள் எவ்வாறு மறைந்தன? 1/4 : மயிலை சீனி.வேங்கடசாமி
தமிழ் நூல்கள் எவ்வாறு மறைந்தன? 1/4 பல நூல்கள் மறைந்துபோனதை அறிந்தோம். அந்நூல்கள் மறைந்துபோனதற்குக் காரணம் என்ன என்பதைப் பார்ப்போம். தலைச்சங்க, இடைச்சங்கக் காலத்தில், பாண்டிநாட்டின் தென் பகுதியில் இருந்த சில நிலப்பகுதிகள், இரண்டு பெரிய கடல் கோள்களினால் மறைந்து விட்டன. அப்போது அப்பகுதியில் இருந்த ஏட்டுச்சுவடிகளும் மறைந்துபோயின. ஏரண முருவம் யோகம்இசை கணக் கிரதம் சாரம் தாரண மறமே சந்தம் தம்பநீர் நிலமு லோகம் மாரணம் பொருளென் றின்ன மானநூல் யாவும் வாரி வாரணம் கொண்ட தந்தோ வழிவழிப் பெயரு மாள…