‘எழுக தமிழ்’ முதல் வெற்றியை ஆணித்தரமாகப் பதித்திருக்கின்றது! – புருசோத்தமன் தங்கமயில்

‘எழுக தமிழ்’ முதல் வெற்றியை ஆணித்தரமாகப் பதித்திருக்கின்றது!     ‘எழுக தமிழ்’ எதிர்பார்க்கப்பட்ட அளவினையும் மீறிய மக்கள் பங்களிப்போடு தன்னுடைய முதல் வெற்றியைப் பதிவு செய்திருக்கின்றது. முதல் வெற்றி என்பதன் பொருள், ‘கடந்த ஏழு ஆண்டுகளில் பேரணி அல்லது போராட்டமொன்றுக்காக மிகையளவான தமிழ் மக்கள் ஓரிடத்தில் ஒன்றித்த முதலாவது சூழல் இதுவாகும்’ என்பது.   ஆட்சி மாற்றமொன்றின் பின்னரான சிறிய மக்களாட்சி இடைவெளியைத் தமிழ்த் தேசிய அரசியல் தளம் ஆக்கவழியிலான பக்கங்களில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்புகளின் போக்கிலும், மிகையான உணர்ச்சியூட்டல்கள்…

‘எழுக தமிழ்!’ எழுச்சிப் பேரணியும் அரசியல் தீர்வுக்கான தேவையும்!

‘எழுக தமிழ்!’ எழுச்சிப் பேரணியும் அரசியல் தீர்வுக்கான தேவையும்!   வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் விருப்பங்களை நிறைவேற்றக் கோரியும்,  தீவிரச் சிக்கல்களுக்குத் தீர்வு காணுமாறு வலியுறுத்தியும் தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கானோர் ஒன்றிணைந்து ‘எழுக தமிழ்’ எனும் எழுச்சிப் பேரணியை யாழ்ப்பாணத்தில் நடத்தியுள்ளனர்.   ‘தமிழ் மக்கள் பேரவை’யின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த எழுச்சிப் பேரணியில் கலந்து கொண்ட மக்கள்,  வடக்கு, கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தின் பூரணத் தன்னாட்சியையும், தன்னுரிமையையும் ஏற்கும் நிகராட்சி (சம ஆட்சி) முறையான தீர்வு வேண்டுமென்றும், தமிழ்த்…