முன்மொழிவுப் பணத்தை வழங்க அறவழிப் போராட்டம் – பா.திருஞானம்

அறவழிப் போராட்டம்   பெருந்தோட்டத் தொழிற் சங்கப் பேரவையின் ஏற்பாட்டில் தமிழ் முற்போக்குக் கூட்டணி, வைகாசி 13, 20147 / மே 26, 2016  அன்று கொழும்பு புறக்கோட்டை  தொடரிநிலையத்தின் முன்னால்   அறவழிப்போராட்டம் ஒன்றினை நடாததினர்.  பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வரவு செலவுத் திட்டதில் முன்மொழியப்பட்ட 2500.00  உரூபா வழங்கப்படாமை குறித்துப் பெருந்தோட்ட முதலாளிமார்  பேரவைக்கு அழுத்தம் கொடுப்பதற்கும். சம்பளப்பேச்சினை உடனடியாக  விரிவுபடுத்துமாறு கோரியும்  . அறப்போராட்டம் நடைபெற்றது. இதன் போது அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண  அவை உறுப்பினர்கள்  முதலானோர்  கலந்து கொண்டார்கள். (பெரிதாகக்…

மே நாள் தொடர்பான கலந்துரையாடல்

மே நாள்  தொடர்பான கலந்துரையாடல் தமிழ் முற்போக்குக் கூட்டணியின்  மே நாள் நிகழ்வு தலவாக்கலையில் நடைபெற்றது.   அதற்கு முன்னதாக, முற்போக்குக் கூட்டணியின் அங்கத்துவ கட்சியான மலையக மக்கள் முன்னணியின் மே நாள் ஆயத்தங்கள் தொடர்பான கலந்துரையாடல் தலவாக்கலையில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் மலையக மக்கள் முண்னனியின் தலைவரும் கல்வித்துணைஅமைச்சருமான வே.இராதாகிருட்டிணன், மலையக மக்கள் முண்னனியின் செயலாளர் யு. இலாரன்சு,  நாடாளுமன்ற உறுப்பினர் யு.அரவிந்தகுமார், மத்திய மாகாண  அவை உறுப்பினர் சு. இராசாராம்  முதலான  கட்சியின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். :

தலவாக்கலையில் மே நாள் – மலையக மக்கள் முன்னணித் தீர்மானம்

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் மே நாளைத்   தலவாக்கலையில் நடாத்துவதற்கு    மலையக மக்கள் முன்னணித் தீர்மானம்!   தொழிலாளர்  நாளை முன்னிட்டுக் கொண்டாடப்படும் மே நாள் நிகழ்வினை   இம்முறை தலவாக்கலையில் தமிழ் முற்போக்குக் கூட்டணியுடன் கொண்டாடுவதற்கு மலையக மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காகச் சிறப்புக் கூட்டம் (பங்குனி 27, ஏப்.09) தலவாக்கலையில் நடைபெற்றது. இதில் மலையக மக்கள் முண்ணணியின் தலைவரும் கல்வி  அமைச்சருமான வே. இராதாகிருட்டிணன், மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமான ஏ. இலாரன்சு, நிதிச்செயலாளர் யு. அரவிந்தகுமார் …