முத்து நெடுமாறன் உரை: தமிழ் வரிவடிவத்தில் அழகியலும் அறிவியலும், சென்னை
ஆடி 29, 2050 புதன் 14.08.2019 மாலை 5.30 (உ)ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம் சொற்பொழிவாளர் : முத்து நெடுமாறன், கணிணியியலர் தேநீர் மாலை 5.00 மூன்றாவது குறுக்குச்சாலை மையத் தொழில் நுட்பப் பயிலக வளாகம் தரமணி, சென்னை 600 113
காலந்தோறும் தமிழ் வரிவடிவம்! – இலக்குவனார் திருவள்ளுவன்
காலந்தோறும் தமிழ் வரிவடிவம்! எந்த மொழியாக இருந்தாலும் காலந்தோறும் வளர்ச்சிநிலையை அடைவதே இயற்கை. தமிழ்மொழியும் அத்தகைய வளர்ச்சி நிலையை அடைந்ததே. இருப்பினும் தொல்காப்பியத்திற்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அவ்வளர்ச்சி நிலையைத் தமிழ் எட்டிவிட்டது. மக்களினம் தோன்றிய இடம், கடல்கொண்ட பகுதியும் சேர்ந்த தமிழ்நிலம். மக்கள் தோன்றிய பொழுது கருத்துப் பரிமாற்றத்திற்காகச் செய்கையைப் பயன்படுத்தி, அதன் பின்னர், ஓவிய உருக்களைப் பயன்படுத்தியுள்ளனர். பல்வேறு வளர்ச்சிகளுக்குப் பின்னர், நெடுங்கணக்கு என்பதை முறைப்படுத்திய காலத்தில் தமிழ்வரிவடிவம் அறிவியல் முறையில் அமைந்து விட்டது. எனவே, தமிழின்…