(தமிழ் வளர்த்த நகரங்கள் 20 – அ. க. நவநீத கிருட்டிணன்: இலக்கியங்களில் தில்லை – தொடர்ச்சி) தமிழ் வளர்த்த நகரங்கள்தமிழ் வளர்த்த தில்லை 15 இலக்கியத்தில் இறைமணம் சங்கக்கால இலக்கியங்களிலிருந்து தற்கால இலக்கியங்கள்வரை எந்த நூலை நோக்கினாலும் அதில் இறை மணம் கமழாமல் இருப்பதில்லை. முழுதும் இறை மணமே கமழும் இயல்புடைய இலக்கியங்களைச் சமய நூல்கள் என்பர் சான்றோர். பெரும்பாலும் தில்லை மாநகரம் வளர்த்த தமிழெல்லாம் சமயத்தமிழ், அதிலும் சைவத்தமிழ் என்றே சொல்ல வேண்டும். ‘திருமுறைகளைக் காத்த தில்லை தேவாரம் பாடிய மூவர்பெருமக்களும்…