தமிழ் வாழும்அன்றே! – பெருஞ்சித்திரனார்
‘தமிழ் வாழ்க’ வென்பதிலும் தமிழ்வா ழாது: தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ்வா ழாது! ! தமிழ் சிரிப்பைப் பெருஞ்சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்டும் கொக்கரிப்புப் பேச்சாலும் தமிழ் வாழாது ! ஆர்த்தெழும் உள் உணர்வெலாம் குளி ருமாறே இமிழ் கடல்சூழ் உலகமெலாம் விழாக்கொண் டாடி ஏற்றமிகச் செய்வதிலும் தமிழ்வா ழாதே ! பட்டிமன்றம் வைப்பதினும் தமிழ்வா ழாது: பாட்டரங்கம் கேட்பதிலும் தமிழ்வா ழாது:” எட்டி நின்றே இலக்கியத்தில் இரண்டோர் பாட்டை எடுத்துரைத்துச் சுவைபடவே முழக்கி நாலும், தட்டி, சுவர் ,தொடர்வண்டி, உந்துவண்டி தம்மிலெல்லாம் “தமிழ் தமிழ்’…