தமிழ் வெற்றி உறுதி “தமிழ் மொழிக்கு நல்லதோர் எதிர்காலம் ஏற்படவிருக்கிறது என்பதையறிந்து அதற்கு உறுதுணையாக இந்த விழா மிகச் சிறப்பான முறையிலே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. “தமிழ் ஆட்சி மொழியாக்கப்பட்டுவிட்டது என்னும்போது, ஐயப்பாடு கொண்டவர்களும், அச்சப்பட்டவர்களும்கூட இருப்பதால், தமிழ்மொழி ஆட்சிமொழியாவதற்குத் துணைதேடும் பெரும் பொறுப்பினைத் தங்கள் கடமையைக் கொண்டு நூல் எழுதி வெளியிடும் இந்த விழாக் குழுவினர் பாராட்டுக்குரியவராவார்கள். மற்ற வணிகத்தைப் போல இதுவும் ஒரு வணிகமோ என்று கருதவேண்டா. வெற்றி பெற வேண்டும் “தமிழ் மொழி ஆட்சி மொழியாவதற்கு இடையூறாக இருந்து வந்த இரண்டு…