செந்தமிழ்தான் என் உயிர் மூச்சு! – சிலேடைச் சித்தர் சேதுசுப்பிரமணியம்

செந்தமிழ்தான் என் உயிர் மூச்சு! முத்தமிழ்ச் சங்கம் வளர்த்த மொழி முப்பெரு  வேந்தர் வளர்த்த மொழி மூப்பே இல்லா இளமை மொழி காப்பியமைந்து கொண்ட மொழி – தொல் காப்பியம்  கண்ட தொன்மை மொழி பரணி பாடிய பண்டை மொழி தரணி போற்றும்  தண்மொழி அகநானூறு தந்த அருமொழி புறநானூறு தந்த புனித மொழி வள்ளுவன் கம்பன் வளர்த்த மொழி  உள்ளம் கவர்ந்த உயர்ந்த மொழி வல்லினம் ,மெல்லினம் இடையினமும் இயல், இசை, நாடக முத்தமிழும் முதல், இடை, கடை என முச்சங்கம் உயிரெழுத்து , மெய்யெழுத்து…

யாருக்கும் வெட்கமில்லை! – இலக்குவனார் திருவள்ளுவன்

யாருக்கும் வெட்கமில்லை! (இளந்தமிழறிஞர்களுக்கான  குடியரசுத் தலைவரின் செம்மொழி விருது வழங்கப்படாமை குறித்த வினாக் கணைகள்)     தன்மானமும் தன்மதிப்பும் மிக்க  வீரப் பரம்பரை என நாம் நம்மைச்  சொல்லிக் கொள்வதற்கு வெட்கப்பட வேண்டும். மொழி காக்கவும் இனம் காக்கவும் உயிர் நீத்த வீர வணக்கத்திற்குரியோர் பிறந்த குலத்தில்தான் நாமும் பிறந்துள்ளோம் என்பதைத் தவிர நமக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை முதலான பண்புகள் இல்லை என்பதே உண்மை. ஈழத்தில் இனப்படுகொலை புரிந்தவர்களை அரியணையில் ஏற்றியதில் நமக்கும் பங்கு உள்ளது என்பதே நம் இழிந்த நிலையை…

தனக்குவமை இல்லாத் தமிழ்! – சந்தர் சுப்ரமணியன்

தொன்மத்தில் சொல்வளத்தில் தூய்வடிவில் மாறுகின்ற இன்றைக்கும் ஏற்ற எழில்நடையில் – நின்று தினம்வளரும் நேர்இல் திறமிவற்றில் என்றும் தனக்குவமை இல்லாத் தமிழ்! நாவில் நடைபழகி நர்த்தனங்கள் ஆடியொலி மேவி மொழியாக மெலெழும்பும் – பூவில் அனைத்துக்கும் முந்தோன்றி ஆளு(ம்)மொழி கட்குள் தனக்குவமை இல்லாத் தமிழ்! ஓசை வகைவிளம்பி உட்புணர்வுக்(கு) ஓர்முறையைப் பேசுமொழி ஒன்றேகாண் பூவுலகில் – தேசோ(டு) இனிக்கும் இயல்வடிவில் ஏழிசையின் ஈர்ப்பில் தனக்குவமை இல்லாத் தமிழ்! முன்னைக்கு முன்னை முதுமகளோ! இல்லையிவள் பின்னை வருமொழிகொள் பேரெழிலோ! – என்னே! அனைத்து மொழிகட்குள் அன்றின்றென்…

எங்கள் குலத் தெய்வம் தமிழ்

எங்கள் குலத் தெய்வம் தமிழ் பங்கயத்துக் குமரிமுனைப் பாதம் சேர்த்தாள் பசும்பொன்முடி வேங்கடத்தைப் புனைந்தாங்கார்த்தாள் பொங்கிவரும் காவிரியை இடையில் கோத்தாள் புரமூன்றும் கடற்கன்னி பணியப் பார்த்தாள் மங்கலம் சேர் மேலைமலைச் செங்கோ லுற்றாள் எங்கள் குலத் தெய்வம் தாய் – கவியோகி ச.து.சுத்தானந்த பாரதியார்: தமிழ்க்குமரி

ஆரியர்கள் தமிழ் எழுத்தைக் கொண்டு தம் மொழியை அமைத்துக் கொண்டனர்

ஆரியர்கள் தமிழ் எழுத்தைக் கொண்டு தம் மொழியை அமைத்துக் கொண்டனர்    ஐரோப்பாவிலுள்ள ஆரிய மொழியினங்களுக்குக் கிரேக்க, இலத்தீன் எனப் பெயர்கள் இருப்பதைப் போல, இந்தியாவிற்கு வந்த ஆரிய மொழிக்கு ஏதேனும் பெயர் உண்டு என்பரேல் அது சரி, ஒத்துக் கொள்வோம். சமற்கிருதம் என்னும் பெயர் எப்பொழுது வந்தது? ஆரியர் இந்தியாவிற்கு வந்து தமிழிலுள்ள உயிரையும் மெய்யையும் தம் மொழியில் வைத்துக் கொண்டு அவ்வெழுத்துகளுக்கேற்ற உயிர் மெய்யெழுத்தையும் அமைத்துக் கொண்டு அவ்வெழுத்துகளுக்கேற்ற மொழிகளையும் ஆராய்ச்சியால் செம்மை செய்து அமைத்துக் கொண்ட தமது மொழிக்குச் “சமற்கிருதம்’…

ஆரியர் இந்தியா வந்தபின்பே தமிழரைப் பார்த்து எழுதினர்

ஆரியர் இந்தியா வந்தபின்பே தமிழரைப் பார்த்து எழுதினர்   ஆரியர் இந்தியாவிற் புகுந்த பின் தமிழர் உடைய நாகரிக அவர் தாங்கருதிய பொருளை எழுத்திலிட்டுப் பொறித்தலுங் கண்டு தாமும் தம்முடைய பாட்டுக்களைப் பண் அடைவுபட வகுத்தஞான்று எழுதுமுறை கண்டறிந்தார். இது  என்னும் பண்டிதர் விளக்குமாற்றானும் நன்கு அறியப்படும். – தமிழ்க் கடல் மறைமலையடிகள்  

திராவிடம் என்பதும் தமிழையே குறிக்கும்- ந.சி.கந்தையா

திராவிடம் என்பதும் தமிழையே குறிக்கும்   திராவிடமென்பது தமிழுக்குப் பிறிதொரு பெயராக விளங்குகின்றது. தமிழ் ‘ழகர’த்தை உச்சரிக்க அறியாத ஆசிரியர் தமிழர் என்னுஞ் சொல்லைத் திராவிடம் என வழங்கினர். ‘நகைச்சுவைக்குப் பொருளாவன ஆரியர் கூறுந்தமிழும்…….போல்வன’ என்னும் பேராசிரியர் உரை. ஆரியர் திருத்த முத்தமிழ் பேச அறியார் எனப் புலப்படுத்துகின்றது. – ந.சி.கந்தையா: தமிழகம்    

ஆரிய நெடுங்கணக்கு தமிழைப் பின்பற்றியது

ஆரிய நெடுங்கணக்கு தமிழைப் பின்பற்றியது ஆரிய மொழிக்குரிய நெடுங்கணக்கு தமிழர் முறையைப் பார்த்துச் செய்யப்பட்டது என்பது ஆராய்ச்சியாளர் துணிவு. தாங்கள் செல்லுமிடங்கட்குத் தக்கபடி புதிய லிபிகள் ஏற்படுத்திக் கொள்ளும் இயல்புடைய ஆரியர் தமிழர் லிபியை ஒட்டிக் “கிரந்தம்’ என்னும் பெயரில் புதியதோர் லிபி வகுத்தனர் – பரிதிமாற் கலைஞர் : தமிழ்மொழி வரலாறு

உயிராய்த் தெரிவது என்றன் தமிழ்மொழி மட்டும்தான்

அழகாய் எனக்குத் தெரிவது உலகில் ஔவை மட்டும் தான் நிழலாய் எனக்குத் தெரிவது காதல் நினைவுகள் மட்டும்தான். புயலாய் எனக்குத் தெரிவது பாரதி பாடிய வரிகள்தான் உயர்வாய் எனக்குத் தெரிவது தாயின் அன்பு மட்டும்தான். கனவாய் எனக்குத் தெரிவது வான எல்லையைத் தொடுவதுதான் தினமும் உழைப்பது தெரிகிற வானை வசப்பட வைப்பதுதான். சிறப்பாய் எனக்குத் தெரிவது மண்ணில் மனிதனாய் வாழ்வதுதான் பிறப்பாய் எனக்குத் தெரிவது புகழைப் பெறுகிற நாளில்தான். உயிராய் எனக்குத் தெரிவது என்றன் தாய்மொழி மட்டும்தான் பயனாய் எனக்குத் தெரிவது வாழ்க்கை பயனுற…

தமிழ் உணர்வு – காசி ஆனந்தன்

தமிழென் அன்னை! தமிழென் தந்தை! தமிழென்றன் உடன் பிறப்பு! தமிழென் மனைவி! தமிழென் பிள்ளை! தமிழென் நட்புடைத் தோழன்! தமிழென் சுற்றம்! தமிழென் சிற்றூர்! தமிழென் மாமணித் தேசம்! தமிழ்யான் வாழும் எழில்மா ஞாலம்! தமிழே என்னுயிர் மூலம்! … உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனார்

இமயம் முதல் குமரி வரை தமிழே இருந்தது

இமயம் முதல் குமரி வரை தமிழே இருந்தது மிகப் பழங்காலத்தில் இமயம் முதல் குமரிவரை தமிழாகவே இருந்தது என்பது மொழியாராய்ச்சியாலும் வரலாற்று ஆராய்ச்சியாலும் நிலை நாட்டப்படும் உண்மையாக உள்ளது. … மண்ணிற் புதையுண்டு மறைந்த ‘ஆரப்பா’ ‘மொகஞ்சதாரோ’ நகரங்கள் வழங்கிய மொழி ‘தமிழே’ என்று தந்தை ஈராசு அவர்கள் நிறுவியுள்ளமையும் இவ்வுண்மையை வலியுறுத்தும். – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்  இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்க காலம்)

கற்கால மொழி தமிழே! – பி.டி.சீனிவாச ஐயங்கார்

கற்கால மொழி தமிழே! மனிதன் தென்னிந்தியாவின் நடுப்பகுதியில் தான் தோன்றியிருக்க வேண்டும். புதுக் கற்கால மக்கள் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒன்றை – பெரிதும் தமிழையே பேசியிருக்க வேண்டும். -பி.டி.சீனிவாச ஐயங்கார்