செந்தமிழ் உடல்உயிர் சேர்உரு வாயினை! – தமிழ நம்பி
செந்தமிழ் உடல்உயிர் சேர்உரு வாயினை! நீயே, செந்தமிழ் உடல்உயிர் சேர்உரு வாயினை! ஆயநற் றமிழ்வாழ் அருந்தூய் நெஞ்சினை! வெம்புலி உறுமலில் வேழப் பிளிறலில் செம்மை சேருயர் செழுந்தமிழ் காத்தனை! உறங்கிக் கிடந்த ஒருதனித் தமிழினம் இறவா மொழியால் எழுந்திடப் பாடினை! ஒற்றைத் தனியாய் ஒண்டமிழ் ஏந்தி முற்றுவல் லுரத்தொடு மும்முர உறுதியில் தளர்நெகிழ் வின்றித் தாக்கிப் பொருதை! கிளர்ந்தெழ முழக்கியித் தமிழரை முடுக்கினை! புதுவை பொரித்த புரட்சிக் குயிலே! எதுவும் யாரும் இணையுனக் கில்லை! ‘முனைதமிழ்க் கொருசிறு தினைத்துணை நலஞ்சேர் வினைசா வெனின்அச் சாநாள்…
பொங்கலோ பொங்கல்! – தமிழ நம்பி
பொங்கலோ பொங்கல்! – தமிழ நம்பி இற்றைக்குப் பொங்கல்நாள் ஏற்றமிகு திருநாளே எழுந்தே வாநீ! கற்கின்ற வேற்றுமொழி கரிப்பானை அதன்கழுத்தில் கட்டி வைக்கும் சுற்றிமுடி நூல்சோம்பல் தோயுமில வயம்மஞ்சள் தூய பால்தான் எற்றைக்கும் இரண்டகத்தால் இனமிழக்கும் குருதியதை எடுத்துள் ஊற்று! ஏனலுறு அரிசியென ஏற்றிருக்கும் அடிமைநிலை இடுபா னைக்குள்! மானமெனும் விறகெரித்து மலிந்தகடை அரசுதரும் மதுக்கு டித்தே கூனலுற மயக்கத்தே கூவிடுவாய் தமிழ்மகனே குரைநா யாக வானத்துங் கேட்டிடவே வல்லொலியில் ‘பொங்கலோ பொங்கல்’ என்றே! – தமிழ நம்பி
தமிழ நம்பி நூல் வெளியீட்டு விழா
நற்றமிழ்ப் பாவலர் தமிழ நம்பியின் ‘விடுகதைப் பா நூறு’ நூல் வெளியீட்டு விழா அழைப்பு ஆவணி 12, 2046 / ஆக. 29, 2015 சனி மாலை 6.00 புதுச்சேரி