பௌத்தத்தை முறியடிக்கவே பிராமணர்கள் மரக்கறி உண்டனர்
பௌத்தத்தை முறியடிக்கவே பிராமணர்கள் மரக்கறி உண்டனர் அக்காலத்தில் பிராமணர்கள் வீட்டிற்கு யாரேனும் விருந்தினர்கள் வந்தால், அவர்களைப் பெருமைப்படுத்த ஆ(பசு)வைக் கொன்று அவருக்கு விருந்தளிக்க வேண்டியிருந்தது. இதனால் அந்த விருந்தாளி ‘கோக்னா’ என்று அழைக்கப்பட்டு, வெறுக்கப்பட்டார். இது போன்றே ஆ வதையைச் செய்பவர்கள் என்று பிராமணர்கள் அனைவரும் வெறுக்கப்பட்டு வந்தனர். இத்தகைய இக்கட்டான நிலைமையில், ஒரு வழிபடும் முறையாக வேள்வியை நிறுத்துவதையும், மாட்டு வதைக்கு முற்றுப்புள்ளி வைப்பதையும் தவிர பௌத்தர்களுக்கு எதிராகத் தங்கள் நிலைமையை மேம்படுத்திக் கொள்ளப் பிராமணர்களுக்கு வேறு வழியில்லை….