அதிகாரமற்ற காவிரி மேலாண்மை வாரியம் : இந்திய அரசு அலுவலகங்களை முடக்குவோம்!
காவிரித் தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு எதிராக அதிகாரமற்ற காவிரி மேலாண்மை வாரியத்தை இந்திய அரசு அமைக்க முயன்றால் தமிழ்நாட்டில் இந்திய அரசு அலுவலகங்களை முடக்குவோம்! தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு! தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம், புரட்டாசி 09,2047/ 25.09.2016 காலை முதல் மாலை வரை, பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்டராமன் முன்னிலை வகித்தார். பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் குழ. பால்ராசு, தஞ்சை பழ. இராசேந்திரன்,…