பதவியாளர் நிரல் பலகையைத் தமிழிலும் வைத்த த.செ.இறையன்பிற்குப் பாராட்டு! – இலக்குவனார் திருவள்ளுவன்

பதவியாளர் நிரல் பலகையைத் தமிழிலும் வைத்த த.செ.இறையன்பிற்குப் பாராட்டு! “தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 22 இல்”, நாம், “தலைமைச் செயலகத்தில் தமிழாய்வு மேற்கொள்க!” என வேண்டிக் கட்டுரை எழுதியிருந்தோம். அதில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தேன். “முனைவர் மு.தமிழ்க்குடிமகன் தமிழ் ஆட்சிமொழி அமைச்சராக இருந்த பொழுது, தலைமைச் செயலர் அறை முகப்பில் பொன்னெழுத்துகளில் ஆங்கிலம் வீற்றிருக்கிறது. தலைமைச் செயலர்கள் பெயர்ப்பட்டியல் ஆங்கிலத்தில் உள்ளது எனக் குறிப்பிட்டு மடல் அனுப்பினேன்.  மூன்று நாளில் மதுரை வந்த அமைச்சர், “இப்பொழுது போய்ப்பாருங்கள். பொன்னெழுத்துகளில் தமிழைக் காணலாம்” என்றார். தலைமைச்…

தமிழ்நாட்டு மருகரான புதிய தலைமைச் செயலரை வரவேற்கிறோம்!

 தமிழ்நாட்டின் தலைமைப் பதவிகளிலும் தமிழ் அமைப்புகளிலும் தமிழரல்லாதார் அமர்த்தப்படுவதே மரபாக உள்ளது. அந்த வகையில் புதிய தலைமைச் செயலராகத் திரு மோகன் வருகீசு சுங்கத்து இ.ஆ.ப.  (Mohan Verghese Chunkath, I.A.S.) தலைமைச் செயலராக அமர்த்தப்பட்டு பங்குனி 18, 2045 / ஏப்பிரல் 1, 2014 அன்று பொறுப்பேற்றுள்ளார்! தமிழ்நாட்டு மருகரான அவரைத் தமிழ், தமிழர் நலனுக்குப் பாடுபட வாழ்த்துகிறோம்! கல்வியகங்களில் தமிழ் மட்டுமே பயிற்றுமொழியாக இருக்க வேண்டும்! தமிழ்நாட்டில் தமிழர்க்கான தமிழர்களின் கோயில்களில் தமிழே வழிபடுமொழியாக இருக்க வேண்டும்! தமிழில் பிற  மொழி…