மும்மொழித் திணிப்புகளையும் எதிர்ப்போம்! – இலக்குவனார் திருவள்ளுவன்
மும்மொழித் திணிப்புகளையும் எதிர்ப்போம்! இந்தி எதிர்ப்புப் போராட்டம்போல் நாம் ஆங்கிலத்திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடத்த வேண்டிய கட்டாயச் சூழலில் உள்ளோம். இந்தி, சமற்கிருதத் திணிப்புகள் தமிழைக் குற்றுயிரும் குறையுயிருமாகச் சிதைத்து வருகின்றன. அவற்றிற்குச் சிறிதும் குறைவி்லாத வகையில் ஆங்கிலத் திணிப்பு நம் தமிழை அழித்துக் கொண்டு வருகிறது. தமிழ் இருக்க வேண்டிய இடத்தில் பிற மொழிச்சொல் இடம் பெற்றது என்றால், அந்தத் தமிழ்ச்சொல் வாழ்விழந்து விடுகிறது. மு.க.தாலின் அரசு, அரசுப் பணியிடங்களில் தமிழ் தகுதித்தேர்வு கட்டாயம், அயலகத் தமிழர் நலன் – மறுவாழ்வுத் துறை…
செய்தக்க செய்யா ஆளுநர்- இலக்குவனார் திருவள்ளுவன்
செய்தக்க செய்யா ஆளுநர் திருவள்ளுவர் ‘தெரிந்து செயல்வகை’ என்னும் அதிகாரத்தில் பின்வருமாறு கேடு தருவனவற்றைக் கூறுகிறார். செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானும் கெடும் (குறள் எண்:466) ஒருவர் கெடுதி அல்லது தீங்கு செய்தால்தான் கேடு விளையும் என்று எண்ணக்கூடாது. கேடு செய்யாவிட்டாலும் செய்ய வேண்டியவற்றைச் செய்யத் தவறினாலும் கேடு வரும் செய்யக் கூடாதவற்றைச் செய்தாலும கேடு வரும். ஒவ்வொரு தனிமனிதருக்கும் இது பொருந்தும். குடும்பத் தலைவர் என்ற முறையில் ஒருவரின் செயல்பாடு செய்யத் தவறியும் தவறானவற்றைச் செய்தும் அமைந்தது எனில் அவரால்,…
இனப்படுகொலையாளி தலைமையாளராக நியமனம் – உருத்திரகுமாரன் கண்டனம்
இனப்படுகொலையாளி தலைமையாளராக நியமனம் – உருத்திரகுமாரன் கண்டனம் மகிந்த இராசபக்சவைத் தலைமை யமைச்சராக நியமித்ததன் மூலம் மைத்திரிபால சிறிசேன ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையைக் கேலி செய்துள்ளார் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையாளரர் விசுவநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார் கடந்த நான்கு வருடங்களாக இலங்கைக்கு ஆதரவு வழங்கிவந்துள்ள ஐநா, இலங்கை தனது செயற்பாடுகளை மாற்றி வருகின்றது எனத் தெரிவித்து வந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இது ஒரு தந்திரோபாயம் என மீண்டும் மீண்டும் தெரிவித்து…