மாமூலனார் பாடல்கள் 30: சி.இலக்குவனார்
(ஆடி 18, 2045 /ஆகத்து 03, 2014 இதழின் தொடர்ச்சி) ௩௰ “உடையும் என் உள்ளம்” – தலைவன் -சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் எல்லா வகையிலும் மேம்பட்டு விளங்கிய தலைவனும் தலைவியும் தம்முள் காதலித்தனர். ஒருவர்கொருவர் வாழ்க்கைத் துணைவர்களாக இருப்பதற்கு உறுதிசெய்து கொண்டனர். பிரிந்து அவர் அவர் வீட்டிற்குச் சென்றனர். தலைவன் தலைவி நினைவோகவே இருந்தான்; தலைவி தலைவன் நினைவாகவே இருந்தாள். தலைவன் காதலியை அடைந்து காதல் உரையாடிக் களிப்பெய்தக் கருதினான். ஒரு பெண் – மணமாகாத பெண்…