தலைவன் தேரின் ஒலி வருகையே புத்தாண்டு வருகை – உருத்திரா இ பரமசிவன்

தலைவன் தேரின் ஒலி  வருகையே புத்தாண்டு வருகை   கல் பொருதிறங்கும் மல்லல் யாறு புல் தடவி பூக்கள் வருடி நறவம் தூஉய் பல்லிணர்ப் பரவி வள்ளி படர்ந்த வளமண் பொள்ளி புடை யுடுத்த மன்றுகள் ஆக்கி வேங்கை படுத்த வேங்கை வெரூஉய் பெயரும் காட்சியும் மலியும். அற்றை வானின் அகல்வாய் திங்கள் ஒளியுமிழ் காலை வருவாய் என்ன‌ விழிஅவிழ் குவளை விரியாநின்று நோதல் யான் உற்றது அறிவையோ வாடிய காந்தள் அன்ன ஊழியும் கொடுவிரல் நுடங்கி வீழ்ந்ததும் அறிவையோ. வளி அவி அடவி…

தலைவன் என்றே நினைக்காதே! – சச்சிதானந்தன் தெய்வசிகாமணி

தலைவன் என்றே நினைக்காதே! அன்னையின் கருவில் சிதைவுற்றுப் பிறந்த, பிண்டம் போலக் கிடக்காதே! உன்னையும் தெருவில் நிறுத்தும் ஒருவனை, தலைவன் என்றே நினைக்காதே! மந்தையில் நரிஎனப் புகுந்திடும் நீசர்கள், மண்டையை உடைக்கவும் தயங்காதே! சந்தையில் மறியென வாக்கிற்கு உயரிய, விலை வைப்பார்கள் வீழாதே! சந்தனம் என்றே சொல்லிச் சொல்லி, சேற்றை வாரி இறைப்பார்கள்! உன்தடம் அழித்து உரிமையைப் பறிக்க, ஊளை இடுவார் மயங்காதே! பந்தயக் குதிரையைப் போலத் தேர்தலில், பாய்ந்திடும் தலைவர்கள் எல்லாரும், உன்முதுகேறி ஓடுகிறார்! அதில், பொய்முகம் கொண்ட பேயர்களை, பின்முதுகாம் புற…

பல்வரி நறைக்காய் – உருத்ரா இ.பரமசிவன்

பிணி நீக்க ஈண்டு வருதி மன்னே!   பல்வரி நறைக்காய் தின்றனை போன்ம் மிடற்றிய தீஞ்சொல் மூசும் பாயல் களித்து ஆர்த்த கழிநெடு கங்குல் மறந்தனை விடுத்தனை மாறு மாறு வருகை. என்னென் கழறும் என்னறியும் தடம் கொல். இடம் வீழ்ந்த நெடுமா மறுக்கும் வெம்புலியன்ன ஊண் மறுக்கும் கால்கொள் வாழ்வும் மறுத்துச்சாயும் எனவாங்கு தூம்புடை வல்லெயிற்று அரவு தீண்டிய‌ நோவு மிக்குற்று நோன்றனள் மாதோ. நன்மா தொன்மா நனிமா இலங்கை நல்லியக்கோடன் யாழிய இசையின் நலம் கெட செய்தனை எற்று எற்று இவள்…

மாமூலனார் பாடல்கள் – 15 : சி.இலக்குவனார்

 (பங்குனி 30, தி.ஆ.2045 / 06, ஏப்பிரல் 13, 2014 இதழின் தொடர்ச்சி) கரு “நந்தன் வெறுக்கை  பெற்றாலும் தங்கார்” – சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (தலைவன் பிரிந்தான். தலைவி வருந்தினாள். தோழி ஆற்றினாள்)  தலைவி: தோழி! பாணரை விடுத்தோம். புலவர்கள் சென்றார்கள். தலைவனை அடைந்தனரோ இல்லையோ?  தோழி: அம்ம! அவரை அடைந்திருப்பார். உன் துயர் நிலையைக் கூறுவர். அவரை எண்ணி எண்ணி இளைத்துள்ள நிலையை எடுத்து இயம்புவர்.  தலைவி: என்ன கூறியும் என்ன பயன்? அவர் எந்நிலையில் உள்ளாரோ?…