தலைவன் தேரின் ஒலி வருகையே புத்தாண்டு வருகை – உருத்திரா இ பரமசிவன்
தலைவன் தேரின் ஒலி வருகையே புத்தாண்டு வருகை கல் பொருதிறங்கும் மல்லல் யாறு புல் தடவி பூக்கள் வருடி நறவம் தூஉய் பல்லிணர்ப் பரவி வள்ளி படர்ந்த வளமண் பொள்ளி புடை யுடுத்த மன்றுகள் ஆக்கி வேங்கை படுத்த வேங்கை வெரூஉய் பெயரும் காட்சியும் மலியும். அற்றை வானின் அகல்வாய் திங்கள் ஒளியுமிழ் காலை வருவாய் என்ன விழிஅவிழ் குவளை விரியாநின்று நோதல் யான் உற்றது அறிவையோ வாடிய காந்தள் அன்ன ஊழியும் கொடுவிரல் நுடங்கி வீழ்ந்ததும் அறிவையோ. வளி அவி அடவி…
பல்வரி நறைக்காய் – உருத்ரா இ.பரமசிவன்
பிணி நீக்க ஈண்டு வருதி மன்னே! பல்வரி நறைக்காய் தின்றனை போன்ம் மிடற்றிய தீஞ்சொல் மூசும் பாயல் களித்து ஆர்த்த கழிநெடு கங்குல் மறந்தனை விடுத்தனை மாறு மாறு வருகை. என்னென் கழறும் என்னறியும் தடம் கொல். இடம் வீழ்ந்த நெடுமா மறுக்கும் வெம்புலியன்ன ஊண் மறுக்கும் கால்கொள் வாழ்வும் மறுத்துச்சாயும் எனவாங்கு தூம்புடை வல்லெயிற்று அரவு தீண்டிய நோவு மிக்குற்று நோன்றனள் மாதோ. நன்மா தொன்மா நனிமா இலங்கை நல்லியக்கோடன் யாழிய இசையின் நலம் கெட செய்தனை எற்று எற்று இவள்…
மாமூலனார் பாடல்கள் 24: சி.இலக்குவனார்
(ஆனி 8, 2045 / சூன் 22, 2014 இதழின் தொடர்ச்சி) “கண்பனி நிறுத்தல் எளிதோ” – தலைவி – சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் உச பாடல். அகநானூறு 97 பாலை கள்ளி அம்காட்ட புள்ளி அம் பொறிக்கலை வறன் உறல் அம் கோடு உதிர வலம் கடந்து புலவுப்புலி துறந்த கலவுக்குழி கடுமுடை இரவுக் குறும்பு அலற நூறி நிரைபகுத்து இருங்கல் முடுக்கர்த் திற்றிகொண்டும் கொலையில் ஆடவர் போலப் பலவுடன் பெருந்தலை எருவையொடு பருந்து…
மாமூலனார் பாடல்கள் – 22 : சி.இலக்குவனார்
(வைகாசி 25, 2045 / 08 சூன் 2014 இதழின் தொடர்ச்சி) உஉ. “செய்வினை அவர்க்கே வாய்க்க” (தலைவனைப் பிரிந்த தலைவியும் தோழியும்) – சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் தோழி: அம்ம! உன்னுடைய அழகு முழுவதும் இன்று எங்கு மறைந்தது? உன்மேனி பசலை (தேமல்) படர்கின்றதே. எல்லாம் அவர் பிரிவினால் அல்லவா? தலைவி: ஆம் தோழி. என் செய்வது? தெருவில் உள்ளோரும், ஊரில் உள்ளோரும் பேசும் பேச்செல்லாம் நம்மைப்பற்றிதான். அவர்கள் உரையாடல்கள் சேரலாதன் முரசுபோல் முழங்குகின்றன. தோழி: கடல்நடுவே…
மாமூலனார் பாடல்கள் – 20 : சி.இலக்குவனார்
(வைகாசி 11, 2045 / 25 மே 2014 இதழின் தொடர்ச்சி) 20. சென்றோர் அன்பிலர் – தலைவி தலைமகன் பிரிந்த பின்னர், தலைவியை நோக்கிக் கூறுகின்றாள். – சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் தோழி! அவர் அன்பு அற்றவர் என்றுதான் நினைக்கிறேன். உயர்ந்து வளர்ந்துள்ள அடிமரங்களுடைய சிவந்த தளிர் பொருந்திய இருப்பை மரங்களிலிருந்து, தந்தத்தைக் கடைந்து செய்தால்போன்ற பூக்கள் உதிர்ந்துகிடக்கும் அவர் செல்லும் வழிகளில், அங்குக் கரடிக்கூட்டம் – குட்டிகளை ஈன்ற பெண் கரடிகள் – ஆட்டு மந்தையைப்…
மாமூலனார் பாடல்கள் – 15 : சி.இலக்குவனார்
(பங்குனி 30, தி.ஆ.2045 / 06, ஏப்பிரல் 13, 2014 இதழின் தொடர்ச்சி) கரு “நந்தன் வெறுக்கை பெற்றாலும் தங்கார்” – சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (தலைவன் பிரிந்தான். தலைவி வருந்தினாள். தோழி ஆற்றினாள்) தலைவி: தோழி! பாணரை விடுத்தோம். புலவர்கள் சென்றார்கள். தலைவனை அடைந்தனரோ இல்லையோ? தோழி: அம்ம! அவரை அடைந்திருப்பார். உன் துயர் நிலையைக் கூறுவர். அவரை எண்ணி எண்ணி இளைத்துள்ள நிலையை எடுத்து இயம்புவர். தலைவி: என்ன கூறியும் என்ன பயன்? அவர் எந்நிலையில் உள்ளாரோ?…
மாமூலனார் பாடல்கள் – 14 : சி.இலக்குவனார்
(பங்குனி 23, தி.ஆ.2045 / 06, ஏப்பிரல் 2014 இதழின் தொடர்ச்சி) கச. மொழிபெயர் தேயத்தராயினும் நல்குவர் – தோழி – சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் ( பிரிவின்கண் வேறுபட்டுள்ள தலைவியும் தோழியும்) தோழி: ஏடி! இவ்விதம் வாட்டமுற்று வருந்துகின்றாய். மேனி பொலிவு அழிந்துவிட்டதே. தலைவி: நீகூட இதன் காரணத்தைக் கேட்டுத்தான் அறிந்து கொள்ள வேண்டிய நிலையில் உள்ளாயோ? தோழி: இல்லையம்மா! சென்றவர் திரும்பும் வரையில் ஆற்றியிருத்தல்தானே நமக்கு அழகு. தலைவி: ஆமாம். அவர் எந்த நாட்டுக்குச் செல்வதாகக் கூறினார்….
மாமூலனார் பாடல்கள் – 13 : சி.இலக்குவனார்
(பங்குனி 09, தி.ஆ.2045 / 23, மார்ச்சு 2014 இதழின் தொடர்ச்சி) 13.பொருள்வயின் நீடலோ இலர் – தோழி – சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (தலைவன் பொருள்தேடச் சென்றபின் வருந்தும் தலைவியும் ஆற்றும் தோழியும்) தோழி : அம்ம! ஏன் இப்படி நினைந்து நினைந்து வருந்துகின்றாய். கண்ணீர் ஆறாகப் பெருகிவழிந்தோடுகிறதே. தலைவி : இளமை நிலைத்து நில்லாது என்பதை அவர் அறியாதாரா என்ன? தோழி : ஏன் அவர் அறியமாட்டார்? நன்றாக அறிவார்! தலைவி : பொருளை…