(ஊரும் பேரும் 48 : இரா.பி.சேது(ப்பிள்ளை): கோயிலும் வாயிலும் 3- தொடர்ச்சி) ஊரும் பேரும் தளியும் பள்ளியும் திருவாரூர்-மண்தளி     குகைக் கோயில்களும் கற் கோயில்களும் தோன்று முன்னே, மண்ணாலயங்கள் பல இந் நாட்டில் இருந்திருத்தல் வேண்டும் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. பழமையான நகரமாகிய திருவாரூரில் உள்ள பாடல் பெற்ற கோயில்களுள் ஒன்று மண்தளி என்று குறிக்கப்படுகின்றது. அம் மண்தளியில் அமர்ந்த மகாதேவனை,         “தம்மானே தண்டமிழ் நூற்புல வாணர்க்கோர்         அம்மானே பரவையுள் மண்டளி யம்மானே” என்று சுந்தரர் பாடும் பான்மையால், தமிழ்ப்புலமை…