ஆறு தலைமுறையினரின்அரிய சந்திப்பு, தாகூர் கலைக்கல்லூரி, தமிழ்த்துறை

சித்திரை 19, 2047 / மே 02, 2016 காலை 10.00 புதுச்சேரி  தாகூர் கலைக் கல்லூரித் தமிழ்த்துறையில் ஆறு தலைமுறைத் தமிழ்ப் பேராசிரியர்கள் சந்திக்கும் அரிய கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.    கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் புதுச்சேரி அரசுக் கலைக் கல்லூரிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள தமிழ்ப் பேராசிரியர்கள் அனைவரும் ஒன்றுகூடி இன்றைய இளம் தலைமுறைத் தமிழ்ப் பேராசிரியர்களோடு கலந்துரையாடும் நிகழ்வு இது.     இந்நிகழ்வில் ஆறு தலைமுறை ஆசிரிய மாணவப் பரம்பரைப் பேராசிரியர்கள் பங்கேற்க உள்ளனர்.   நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு-  தலைமை:…

பதினெண்கீழ்க்கணக்குத் தேசியக்கருத்தரங்கம்

தாகூர்கலைக்கல்லூரியில் பதினெண்கீழ்க்கணக்கு தேசியக்கருத்தரங்கம் ஐப்பசி 13, 2045, அக்.30,2014 அன்றுநடைபெற்றது. முனைவர் செல்வம் தலைமையில் முனைவர் வச்சிரவேலு வரவேற்றுப் பேசினார். கல்லுாரி முதல்வர் முனைவர் பிச்சை மணி முன்னிலை வகித்தார். தனித்தமிழ் இயக்கத்தலைவர் முனைவர் க.தமிழமல்லன் கருத்தரங்க மலரை வெளியிட்டுச் சிறப்புரை நிகழ்த்தினார். திரளான மாணவர்களும் பேராசிரியர்களும் அதில் கலந்து கொண்டனர்.