(ஊரும் பேரும் 60 : இரா.பி.சேது(ப்பிள்ளை) – இறையும் அறமும்-தொடர்ச்சி) ஊரும் பேரும் தானமும் தருமமும் “பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள்பார ளித்ததும் தருமம் வளர்த்ததும்” தானம்தமிழ் நாட்டார் நன்கறிந்து போற்ற வேண்டும் என்று முறையிட்டார் பாரதியார். அம் மன்னர் அளித்த தான தருமங்கள் சில ஊர்ப் பெயர்களால் இன்றும் அறியக் கூடியன. தஞ்சை நாட்டில் உள்ள அன்னதானபுரம், தருமதானபுரம், மகாதானபுரம், உத்தமதானபுரம் முதலிய ஊர்கள் முற்காலத்தில் அற நிலையங்களாக விளங்கின என்பதற்கு அவற்றின் பெயர்களே சான்றாகும். தருமம்இன்னும், அறஞ் செய விரும்பிய அரசரும்…