கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 42 : தாமரைக் கண்ணி நிகழ்ந்தன கூறல்
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 41 : 8. கடல்நகரில் தங்கிய காதை-தொடர்ச்சி) பூங்கொடி தாமரைக் கண்ணி நிகழ்ந்தன கூறல் தகவுரை கேட்டோர் அகமிக வுருகிஇன்னுஞ் சின்னாள் இருந்திடல் வேண்டும்என்ன நயந்தனர்; எழிற்பூங் கொடியும்ஆண்டுளார் பண்பொடு அவர்தம் அரசியல் 30காண்டகு நெஞ்சினள் கனிவோ டிசைந்தனள்;சின்னாள் இருந்து செந்தமிழ் பரப்பிப்பின்னர் மீளுவள் பேதுறல் தவிர்நீ’இன்னணம் தாமரைக் கண்ணி இசைத்தலும் அருண்மொழி மனநிலை கலங்கினள் ஆயினும் `கன்னித் தமிழின்விலங்குபடை படஅவ் வீரங் காட்டினள்;வாழ்கஎன் மகளே! வாழ்கஎன் மகளே!வாழ்கஎன் தமிழே! வாழ்கஎன் தமிழே!’ 40எனுமுரை கூறி இறுமாந் திருந்தனள்மனமொழி…