தமிழ்நெறிக்குடும்ப ஒன்றுகூடல்- பெருஞ்சித்திரனார் நினைவேந்தல்
பெருந்தகையீர் வணக்கம், நேற்று நடைபெற்ற தமிழ்நெறிக்குடும்ப ஒன்றுகூடல் தமிழ் தேசியத்தந்தை ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் நினைவேந்தல் சிறப்புற நடைபெற்றது. நிகழ்வில்பங்குபெற்ற அனைத்துத் தோழமைகளுக்கும் மனமார்ந்த நன்றிகள். சாதியல்ல உறவு! தமிழ் நெறிக்குடும்பமே உறவு! என்பதை நெஞ்சில் ஏந்துவோம். வழக்குரைஞர் அங்கயற்கண்ணி கயல் (படத்தொகுப்பு: படங்களைச் சொடுக்கிப் பார்க்கவும்)
நினைவுமேடைத் திறப்பும் நினைவேந்தலும்
அம்மையார் தாமரை பெருஞ்சித்திரனார், புலவர் இறைக்குருவனார் ஆகியோரது நினைவுமேடைத் திறப்பும், முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும்,சென்னை மேடவாக்கம்,பாவலரேறு தமிழ்க்களத்தில் மார்கழி7, 2044/ திசம்பர்12, 2013 ஞாயிறன்று நடைபெற்றன.