தாய்த்தமிழும் மலையாளமும் 4 – இலக்குவனார் திருவள்ளுவன்
(அகரமுதல 19.07.15 தொடர்ச்சி) தாய்த்தமிழும் மலையாளமும் 4 தமிழ் மக்களே பழந்தமிழ்ச் சொற்களைத், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலான பிற சொற்களாக – இம்மொழிகள் பேசப்பட்ட பகுதி ஒரு காலத்தில் தமிழ் நிலமாக இருந்த பொழுது வழங்கிய தமிழ்ச் சொற்களே இவை என்பதை உணராமல் – கருதும் பொழுது இம் மொழி பேசும் மக்கள் எல்லாச் சொற்களும் தமக்குரியனவே எனக் கருதுவதில் வியப்பொன்றும் இல்லை. எனவேதான் அவர்கள், தமிழ்ச் சொற்கள் கண்டறியப்படும் தொல்லிடங்களையெல்லாம் தம் மொழிச் சொற்களாகக் காட்டுகின்றனர். எனவே, தமிழ்க்குடும்ப மொழிகளில்…