புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.36- 1.6.40
(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.31- 1.6.35 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 6. தாய்மொழிப் படலம் கூட்டிய புலவரைக் குமரி நாட்டிடைநாட்டிய தமிழ்க்கொடி நுடங்கு நாளவைக்கோட்டியி லவரவர் கொணர்ந்த பாக்களைஏட்டிடை யிருந்தரங் கேற்றி னானரோ. அண்ணிய புலவர்பே ரவையிற் றங்கள்பாக்கண்ணிய வுட்பொருட் கருத்தைப் பேரவைஉண்ணியே யுடன்பட வுரைத்துத் தம்முளத்தெண்ணிய படியரங் கேற்றி னானரோ.
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.31 – 1.6.35
(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.27 – 1.6.30 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 6. தாய்மொழிப் படலம் தாய்க்கொலை புரிந்தவர் தமிழ்க்கொலை புரிந்தாராய்க்கொலை புரிந்தவட வாரியரின் மானச்சேய்க்குண மிலாதவிழி தீயரை யொறுத்தேதாய்க்குநிக ராகிய தமிழ்மொழி வளர்த்தார். கழகம் – மேற்படி வேறு வண்ணம் +++++ சேய்க்குணம் – தாயைப் பேணுங் குணம். 32. கல் – மலை. 33. புலக்கண் அறிவுக்கண். அலகு உறு – அளவுபட்ட, பகுதிப் பட்ட அது, அகம் புறம் +++++ இராவண காவியம் –…
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.27 – 1.6.30
(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.23- 1.6.26 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 6. தாய்மொழிப் படலம் வாய்மொழி பொதிந்திடுசொன் மாலைபல வேய்ந்துதாய்மொழி வளர்த்திடு தமிழ்ப்புலவர் தம்மைஆய்மொழி புனைந்தில கரியணை யிருத்திப்போய்மொழி பெறாதிலகு பொன்முடி புனைவார். தேங்குபுகழ் தாங்கிய செழும்புலவர் கொள்ளஓங்குமுகில் தோய்முக டுயர்ந்தமலை யேறிஆங்கவர்கள் கண்டநில மானவை யனைத்தும்பாங்கொடு கொடுத்துயர் பசுந்தமிழ் வளர்த்தார். என்றுமுயர் செந்தமி ழியற்புலவர் கொள்ளக்கன்றினொடு தூங்கிவரு கைப்பிடி புணர்ந்தவென்றுகொடு வந்தவெறி வேழமது தந்துநன்றியொடு தொன்றுவரு நற்றமிழ் வளர்த்தார். மாணிழை புனைந்துமண வாமல ரணிந்தும்பாணரொடு கூடவரு பாடினியர்…
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.23- 1.6.26
(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.18 – 1.6.22 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 6. தாய்மொழிப் படலம் 23. சொற்சுவை யடுத்தொளிர் தொடைச்சுவை நிறைந்த நற்சுவை யுடைப்பொரு ணலச்சுவை செறிந்த பற்சுவை படச்செயுள்செய் பாவலர்கொ ளப்பொன் னிற்சுவை கொடுத்துய ரியற்றமிழ் வளர்த்தார். 24. மண்ணுமுழ வோடுகுழல் நண்ணுமிசை யாழின் எண்ணொடு கலந்திலகு மேழிசை பொருந்தப் பண்ணொடு திறந்தெரிபு பாடுமவர் கொள்ள எண்ணிய கொடுத்துய ரிசைத்தமிழ் வளர்த்தார். 25. உண்ணிகழ்…
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.18 – 1.6.22
(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.13 – 1.6.17 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 6. தாய்மொழிப் படலம் ஷ வேறு வண்ணம் 18. ஏடுகை யில்லா ரில்லை யியலிசை கல்லா ரில்லை பாடுகை யில்லா யில்லை பள்ளியோ செல்லா ரில்லை ஆடுகை யில்லா ரில்லை யதன்பயன் கொள்ளா ரில்லை நாடுகை யில்லா ரில்லை நற்றமிழ் வளர்ச்சி யம்மா. 19. தமிழென திருகட் பார்வை தமிழென துருவப் போர்வை தமிழென துயிரின் காப்புத்…
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6. 13 – 1.6. 17
(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.8 – 1.6.12 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 6. தாய்மொழிப் படலம் 13. ஈங்கொரு புதுமை யில்பொரு ளுவமை யெனத்தகு சிறுமுகை மணம்போற் பாங்கொடு மக்கள் பற்பல பெற்றும் பழமையென் றளவிடு மகவுந் தாங்கிய தாவிற் கன்னியா யிளமை ததும்பிடுந் தண்டமிழ்த் தாயை நீங்கிய விளமைச் சிறியவ ருலக நெறியிலா ரொத்துளே மெனலே. 14. வண்புகழ் மூவ ரொடுதமிழ்க் குயிரை வழங்கிய…
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.8 – 1.6.12
(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.3- 1.6.7 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 6. தாய்மொழிப் படலம் 8. ஒருமொழி யேனு மினையநாள் காறு முலகெலாந் தேடியு மடையா இருவகைக் கைகோ ளன்பினைந் திணையோ டெழுதிணை யகம்புற மென்னும் பொருளினை யுடைய பழந்தமிழ்த் தாயைப் பொருளிலா ளெனப்புகல் பொய்யர் மருளினை யுண்மைப் பொருளென மதிப்போர் மதியினுக் குவமையம் மதியே. 9. பேசுநற் குணமு மெழுதெழில் வனப்பும் பெரியர்சொற்…
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.3-1.6.7
(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.5.21- 1.6.2தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 6. தாய்மொழிப் படலம் 3. இனியசெந் தேனு மினியவான் பாலு மினியதீஞ் சுவைநிறைந் தியலும் கனியதன் சாறுங் கரும்பினின் சாறுங் கனிவரு முதலவின் பருப்பும் இனியவின் சுவையொன் றேயுளங் கேட்டற் கினிமைநம் பாலிலை யென்று கனியவுள் ளுருகிக் கவன்றிட விரங்கிக் கைசெயுங் கனிதமிழ் மொழியே. 4. உரப்பியுங் கனைத்து முடிமுத லடிநாக் குழறியுங் குழறியு…
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.5.21-1.6.2
(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.5.16-20 தொடர்ச்சி) இராவண காவியம் தமிழகக் காண்டம் தாய்மொழிப் படலம் 21. காதல்முதிர்ந் தில்லறஞ்செய் காதலர்தா மவரோடு சாதலிலை யேற்றனியாந் தபுதார நிலைவாழ்தல் ஈதலது பலரைமணந் திடர்விளைக்கு மிழிசெயலைக் காதினுங்கேட் டறியார்கைக் களிறிளைக்கு மலைநாடர். 22. அறப்போர்செய் குவதன்றி யரசிழக்க நேரினுமே மறப்போர்செய் தறியாது மறஞ்செறிந்த மனத்தினராய்ப் புறப்பொருளின் றுறையறிந்து பொருதுபுகழ் பூண்டிருந்தார் திறப்பாடெல் லாம்பொருந்தித் திருவளருந் தென்னாடர். 23. ஆன்றவிந்த தமிழ்ப்பெரியா ரந்தணரா மையரெனுஞ் …