இளைஞர் கைகளில் இணையத்தமிழ் – இலக்குவனார் திருவள்ளுவன்
இளைஞர் கைகளில் இணையத்தமிழ் தமிழ்நாட்டில் எந்த ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றாலும் அனைவரும் எதிரொலிக்கும் கவலை முதியோர் அவையாக இருக்கிறதே என்பதுதான். எந்தத் தமிழ்க்கூட்டம் என்றாலும், இளைஞர்களைக் காண முடிவதில்லை. ஒருவேளை உரையாளர்களின் குடும்பத்தினர் யாரும் வந்திருந்தாலும் அவர்கள் ஒருவர் அல்லது இருவராகத்தான் இருப்பர். கூட்டம் இறுதிவரை இருப்பார்கள் என்பதும் ஐயமே. இதற்காகவே நான் கல்லூரிகளில் நிகழ்ச்சிகள் நடத்தினேன். அங்கும் தமிழ் பயிலும் ஏதோ ஓர் ஆண்டின் மாணாக்கர்கள் மட்டும் அமர்ந்திருப்பார்கள். வருபவர்கள் ஆர்வமாகத்தான் இருப்பர். ஆனால், கல்லூரியில் இந்த நிகழ்ச்சிக்கு இத்தனாம் ஆண்டு…
இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 37: ம. இராமச்சந்திரன்
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 36 தொடர்ச்சி) இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 37 மேலும் தமிழக மக்கள் எழுத்தறிவற்ற மூடர்களாக இருக்கின்றார்களே! புதிய சிந்தனை பெற்று வாழ்வது எங்ஙனம்? என இன்றைய குடியரசு நாடு பெற்றிருக்கும் அவலத்தை கண்டித்தும் நையாண்டி செய்தும் கூறுகிறார் கவிஞர். ‘கட்டையை நிறுத்தினும் கழுதையைக் காட்டினும் அதற்கே வாக்கை அளித்தல் வேண்டும் என்றே கூறி நன்றுதம் கட்சிப் பேரெண் பெற்றிடப் பெரிதும் முயன்றனர்’ (துரத்தப்பட்டேன்: அ-ள் 42-45) தொண்டுள்ளம் கொண்டவருக்கு வாக்குப் போட வேண்டும்…
தமிழ் மொழி – பண்பட்ட பழமை மொழி : பனிகோ
தமிழ் மொழி – பண்பட்ட பழமை மொழி இறைவனோடும் இவ்விகத்தோடும் இணைந்து தோன்றிட்டு காலங்களைக் கடந்து வாழ்ந்திடும் பண்பட்ட பழமை மொழி அடர்காடுகளில் கரடுமலைகளில் அலைந்து திரிந்திட்ட முதல் மனிதன் இயற்கையோடு இணைந்து உறவாடி வடித்திட்ட இயற்கை மொழி சொல்லொன்றை உயிர் ஓவியமாய் உகமதில் வாழும் காவியமாய் சிந்தனையைக் கடைந்து படைத்து தீட்டிட்ட தொன்மை மொழி தானே விதையுண்டு தாவரமாய் வேரோடி ஆலமரமாய்த் தழைத்திட்டு இலக்கண இலக்கியம் வளம் கொழுத்துச் செழுத்திட்ட செம்மொழி தெலுங்கு கன்னடம் துளு மலையாளம் என இருபத்தொன்பது புதுமொழி விழுதுகள்…
தாய் மொழியிலேயே எல்லாம்! – பேரறிஞர் அண்ணா
தாய் மொழியிலேயே எல்லாம்! தமிழ்நாட்டார் மட்டுமே வேற்றுமொழியில் பாடுவதைக் கேட்கின்றனர். தமிழ் நாட்டைப் போல் வேறு எந்த நாட்டிலும் அந்த நாட்டின் மொழியல்லாத வேறு மொழியில் சங்கீதம் பாடுவதைக் கேட்க முடியாது. ஒவ்வொரு நாட்டினரும் தங்கள் தங்கள் தாய் மொழியிலேயே எல்லாக் கலைகளையும் வளர்ச்சி பெற்று வருகின்றனர்; இல்லாத கலைகளையும் புதிதாக ஆக்கி வருகின்றனர். தமிழரைப் போலத் தாய்மொழிக் கலை உணர்ச்சியற்றவர்களை எந்த நாட்டிலும் காணமுடியாது. பேரறிஞர் அண்ணா : தமிழரின் மறுமலர்ச்சி: பக்கம்.18
ஞயம்பட வரை – கட்டுரைப் போட்டி: மொத்தப்பரிசு உரூபாய் 30,000/
தமிழ்மொழி முதன்மை குறித்த ஞயம்பட வரை – கட்டுரைப் போட்டி அ) தலைப்பு : “இன்றைய தமிழர்களின் வாழ்வில் தாய்மொழிக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்ன? அதனை அதிகரிக்க என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம்?” – விடை காண முயல்வோம். ஆ) கட்டுரைகள் 1500 சொற்களுக்கு மேலும், 2500 சொற்களுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். இ) உங்கள் கட்டுரைகளை ஒருங்குகுறி(Unicode) வடிவில், சொல்ஆவணமாக(MS- Word Document) ஆக மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கவும். கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. ஈ) பரிசுத்தொகை : முதல் பரிசு – 15000 இரண்டாம்…
பேரின்பம் நல்குமாம் தாய்மொழி – கவிக்கோ ஞானச்செல்வன்
தாய்மொழி என்பது சிந்தனைக்கோ ஊற்றுக்கண் சீர்மைக்கோ நாற்றங்கால் வந்தனைக்கோ சீர்தெய்வம் வாழ்க்கைக்கோ உயிர்நாடி முந்திவரும் நல்லறிவு மூளுகின்ற மெய்யுணர்வு வந்துலவும் பூந்தென்றல் வழிகாட்டும் ஒளிவிளக்கு தாய்மொழி என்பது தாய்முலைப் பாலதாம் ஊட்டம்மிகத் தருவதாம் உரமூட்டும் வரமதாம் வலிமையைச் சேர்ப்பதாம் வல்லமை வளர்ப்பதாம் பிணியெலாம் அகற்றுமாம் பேரின்பம் நல்குமாம் நந்தமிழ் வண்டமிழ் செந்தமிழ் பைந்தமிழ் இன்தமிழ் பொன்தமிழ் சொற்றமிழ் நற்றமிழ் சுகத்தமிழ் அகத்தமிழ் சங்கத்தமிழ் தங்கத்தமிழ் பொங்குதமிழ் தங்குதமிழ் கன்னல்தமிழ் கட்டித்தமிழ்! – கவிக்கோ ஞானச்செல்வன்
பள்ளிகளில் தாய்மொழி கட்டாயமாக்கப்பட வேண்டும்: தினமணி வைத்தியநாதன் வலியுறுத்தல்
மத்திய அரசின் பள்ளிகளிலும் பதின்நிலைப் பள்ளிகளிலும் தாய்மொழி கட்டாயமாகக் கற்றுத் தரப்பட வேண்டும் எனத் “தினமணி’ ஆசிரியர் கே.வைத்தியநாதன் வலியுறுத்தினார். சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள அமிர்தா வித்யாலயா தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா ஆடி 2, 2045 / 18.07.14 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அவர் பின்வருமாறு பேசினார்: இந்தியாவின் பெருமையை வெளிநாட்டில் நிலைநாட்ட வேண்டுமானால், அதற்கான நாற்றங்கால் தொடக்கப் பள்ளிகளில்தான் இருக்கிறது. இந்தப் பள்ளிகளில் குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுப்பதை வேண்டா என்று சொல்லவில்லை. அதோடு,…