தோழர் தியாகு எழுதுகிறார் 84: தாராளவியமா? தாராளியமா? தாராளிகமா?
(தோழர் தியாகு எழுதுகிறார் 83 தொடர்ச்சி) சொல்லடிப்போம் வாங்க! (9) தாராளவியமா? தாராளியமா? தாராளிகமா? இனிய அன்பர்களே! நவ தாராளவாதமா? புதுத் தாராளியமா? என்பதிலிருந்து இந்த உரையாடல் தொடங்கியது நினைவிருக்கும். நவ தாராளவாதம் வேண்டா என்று தொடக்கத்திலேயே தள்ளி விட்டோம். அதுதான் வேண்டும் என்றோ, அதுவே இருக்கட்டும் என்றோ யாரும் கட்சி கட்டவில்லை. ‘நவ’ என்பது புது எனப் பொருள் தரும். கலைச் சொல்லாக்கத்தில் பாதி தமிழாகவும் பாதி வேற்று மொழியாகவும் இருக்கலாகாது. நவ என்ற வடமொழிச் சொல்லை தாராளம் என்ற தமிழ்ச்சொல்லோடு சேர்க்க…