எப்படி வளரும் தமிழ்? 3/3 : கவிஞர் முடியரசன்
(எப்படி வளரும் தமிழ்? 2/3 தொடர்ச்சி) எப்படி வளரும் தமிழ்? 3/3 இம்மட்டோ? பிறநாட்டுத் தலைவர்கள், புரட்சியாளர், சிந்தனையாளர் ஆகியோர்பாற் கொண்ட பற்றாலும் அவர்தம் கொள்கையிற் கொண்ட காதலாலும் இலிங்கன், இலெனின், ஃச்டாலின், காரல்மார்க்சு, சாக்ரடீசு என்றெல்லாம் பெயர் வைத்துக் கொள்கின்றனர். எவ்வெவ் வகையால் ஒதுக்க இயலுமோ அவ்வவ் வகையாலெல்லாம் தமிழை ஒதுக்கிவருகின்றனர். ஆனால், இன்று இளைஞரிடையே அவ்வுணர்வு அஃதாவது மொழியுணர்வு ஓரளவு அரும்பி வருவது ஆறுதல் தருகிறது. இந்து மதத்தவர் முருகவேள், இளங்கோவன், பிறைநுதற் செல்வி, தென்றல் என்று…