கலைச்சொல் தெளிவோம் 35 : தாழி மரம் – bonsai
தாழி மரம் – bonsai போன்சாய் (bonsai) என்றால் குறுஞ்செடி வளர்ப்பு, குறுமர வளர்ப்பு என மனையறிவியலில் கையாளுகின்றனர். பொருள் சரியாக இருந்தாலும் சங்கச் சொல் அடிப்படையில் நாம் புதுச் சொல் உருவாக்குவது நன்றல்லாவா? பானையைக் குறிக்கும் தாழி என்னும் சொல் சங்க இலக்கியங்களில் எட்டு இடங்களில் கையாளப்பட்டுள்ளது. அவற்றுள் குறிப்பிடத்தக்க வரி பின்வருமாறு ஆகும். தாழிமுதற் கலித்த கோழிலைப் பருத்தி (குடவாயில் கீரத்தனார்ர : அகநானூறு 129: 7) தாழியாகிய மட்பாண்டத்தில் வளர்க்கப்படும் பருத்திச் செடியை இது குறிக்கிறது. மண்தொட்டிகளில் சிறு செடிகளை…