தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கிய முதல் கையேடு – 4 – இலக்கிய அறிஞர் இராசம் அம்மையார்
(பங்குனி 15, 2045 / மார்ச்சு 29, 2015 தொடர்ச்சி) தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கின முதல் கையேடு – 4 (மொழிபெயர்ப்பு முயற்சி-1) இயீன் ஃகைன் (Jeanne Hein) என்ற அமெரிக்கப் பெண்மணி, பங்குனி 04, தி.ஆ. 1950 / 1919-ஆம் ஆண்டு மார்ச்சு 17-ஆம் நாள் பிறந்தவர். மிக நல்ல முற்போக்கு எண்ணம் கொண்டவர். வியத்துனாம் போர்க்காலத்தில் எளியவர்கள் சார்பில் போராடியவர். கல்லூரியில் இளங்கலைப் படிப்பு முடித்தார்; பிறகு இல்வாழ்க்கை. இந்தியாவில் கிறித்தவ சமயம் பரவியது எப்படி என்று தெரிந்துகொள்ளும்…