திசைகாட்டும் கல்லை நிறுவிய தமிழர்கள்
தமிழ் வேந்தர் தம் நாட்டின்கண் வழிப் போவார்க்குரிய இடையூறுகளை விலக்கி, எல்லாரும் போக்குவரவு புரிதற்குரிய பெருவழிகளை அமைத்து அவ்விடங்களில் விலங்குகளாலும் கள்வர் முதலிய தீயவர்களாலும் துன்பம் நேராதபடி படைமறவர்களை நிறுவக் கருதினர். பலவூர்களுக்குச் செல்லும் வழிகள் ஒன்று கூடி மயங்குதற்குரிய கவர்த்த வழி ‘கவலை’ எனப்படும். இவ்வாறு பலவழிகள் கூடிய நெறியிற் செல்வார். தாம் செல்லும் ஊருக்குரிய வழி இன்னதெனத் தெரிந்து கொள்ள இயலாது. மயங்குதலியல்பு வழிப்போவார் இவ்வாறு மயங்கி இடர்பாடுதலாகா தென்றெண்ணிப் பண்டைத்தமிழர் பல வழிகள் சந்திக்கும் இடத்திலே திசைகாட்டும் கல்லை…