திட்டச்சேரியில் மருத்துவக்கழிவுகளால் தொற்றுநோய் பரவும் கண்டம்
திட்டச்சேரிப் பகுதியில் மருத்துவக்கழிவுகளால் தொற்றுநோய் பரவும் கண்டம் நாகப்பட்டினம் மாவட்டம், திட்டச்சேரிப் பேரூராட்சியில் மருத்துவக்கழிவுகளால் தொற்று நோய் பரவும் கண்டம்(அபாயம்) ஏற்பட்டுள்ளது. திட்டச்சேரி பேரூராட்சிப் பகுதியில் தனியார் மருத்துவமனைகள், தனியார் இரத்த ஆய்வு நிலையங்கள் ஏராளமாக உள்ளன. இங்குப் பண்டுவத்திற்கு வரும் நோயாளிகளின் நோய் தொடர்பான துணிகளையும், இரத்தக்கறை படிந்த பஞ்சுகளையும் சாலைஓரத்திலும், திட்டச்சேரி பேருந்து நிலையம் பின்புறத்திலும் கொட்டி விடுகின்றனர். திட்டச்சேரி பேருந்து நிலையத்தின் அருகில் அரசு தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளிகள் உள்ளன. இப் பகுதியில் உள்ள அரசு /…