இந்தியும் சமக்கிருதமும் எங்கும் வேண்டா! – ஆற்காடு க. குமரன்

    இந்தியும் சமக்கிருதமும் எங்கும் வேண்டா!   நடுவண் அரசின் நையாண்டித்தனம் மாநில அரசின் மெத்தனம் மக்கள் என்ன மத்தளமா ஆட்சி என்ன அடிமைக் கொத்தளமா?   தாய்மொழி  தாய்மையின் மொழி வாய்மொழி வாய்மையின் மொழி மற்ற மொழிகள் மத்தியின் சதி   வக்கற்று வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு . . . திணிப்பவரை வந்த திசையில் விரட்டும் உன் தாய் தந்தையரைத் தான் முதியோர் இல்லத்தில் விட்டு விட்டாய் உன் தாய்மொழியை யாவது உன்னோடு வைத்துக் கொள் ஊர் மேல் விடாதே…

இந்தி, சமக்கிருத மொழிகளைத் திணிப்பதை எதிர்த்து இணையவழிக் கண்டனக் கூட்டம்

கெடல் எங்கே தமிழின் நலம்? அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க (பாவேந்தர் பாரதிதாசன்) தமிழ்க்காப்புக் கழகம் இந்தி, சமக்கிருத மொழிகளைத் திணிப்பதை எதிர்த்து இணையவழிக் கண்டனக் கூட்டம் கார்த்திகை 21, 2051 ஞாயிறு 06.12.2020 காலை 10.00 மணிமுதல் உங்களையும் பங்கேற்க அழைக்கிறோம்! மத்திய அரசு நாளும் இந்தி,சமக்கிருதத் திணிப்புகள் மூலம்  தமிழ் முதலான தேசிய மொழிகளை அழித்து வருகிறது. இது குறித்து  மேற்குறித்த நாளில் நடைபெறும் கண்டனக் கூட்டத்தில் நீங்களும் பங்கேற்கலாம். கூட்ட இணைப்பு விவரம் பிறகு தெரிவிக்கப்படும். ஐந்து நிமிடததிற்குள் பேச…

வேண்டவே வேண்டா சமற்கிருதமும் இந்தியும்

  சமற்கிருதத்திணிப்பிற்கும் இந்தித்திணிப்பிற்கும் எதிராகக் கூறுபவர்கள் என்ன சொல்லுகிறார்கள்? இவ்விரு மொழிகளையும் எதிர்க்கவில்லை; இவ்விருமொழிகளின் திணிப்புகளைத்தான் எதிர்க்கின்றோம் என்கின்றனர். ஆனால், நாம் அவ்வாறு கூறப்போவது இல்லை. விருப்பம் என்ற போர்வையில் இவை திணிக்கப்படுகின்றன; தமிழ் நாட்டில் தமிழ் மக்களிடம் இருந்து அவர்களின் தாய்மொழியாம் தமிழை அப்புறப்படுத்துகின்றன; பெரும்பான்மை என்ற தவறான புள்ளிவிவர அடிப்படையிலும், பொய்யான சிறப்புகள் அடிப்படையிலும் உலக மொழிகளின் தாய் மொழியான தமிழை அதன் தோற்றுவாயான தமிழகத்திலிருந்து ஒவ்வொரு துறையிலும் அழித்து வருகின்றன. எனவே, விருப்ப மொழி என்ற போர்வையிலும் இவை தமிழ்நாட்டில்…