புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.3.6-10
(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.76-81 / 1.3.1-5 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 3. மக்கட் படலம் 6. மேழி யானில மேவுயிர் சூழ வுண்டு தொகுபசி வீழ வுண்டி விளைக்குவோர் ஆழி மொய்ம்பின்வே ளாளரே. 7. களவு முற்றிய கற்பினர் அளவ றிந்தற மாற்றிட உளம றிந்தவர்க் கோதுவோர் பளகி லாத்தமிழ்ப் பார்ப்பனர். 8.மற்று முள்ள வகுப்பெலாம் உற்ற வாழ்வுக் குறுதுணை யிற்றொழிலினி யன்றதாற் பெற்ற தொழிற் பேரரோ. 9. முதலில் வெம்பசி மூளவே…
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.76-81 / 1.3.1-5
(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.76-80 தொடர்ச்சி) 81. ஐம்பெருங் கண்டமாவின் றமைதரு முலகில் வாழும் வம்பலர் பயில்வண் டன்ன மக்களெல் லோர்க்கு முன்னர்த் தம்பெயர் விளங்கப் போந்த தாயகம் இதுவே யென்றால் இம்பரில் இதனுக் கொன்றீ டிதுவலால் பிறிதொன் றுண்டோ ? 3. மக்கட் படலம் வேறு அத்த மிழகத் தாய்தரும் முத்த மிழ்த்துறை முற்றிய மெய்த்த மிழ்ப்புல வேந்தரைப் புத்து ணர்வுறப் போற்றுவாம். 2. முன் னு மில்லற முற்றியே தன்ன லங்கள் தவிர்த்துமே இன்ன லஞ்செய் திசைபெறும் அன்ன ரே தமி…
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.76-80
(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.71-75 தொடர்ச்சி) 76. முல்லையைக் குறிஞ்சி சார முல்லைமற் றதனைச் சார எல்லியுண் டாக்கு பாலை யிருமையுஞ் சேரச் சார மல்லலஞ் செறுவை நெய்தல் மருவிட மருதந் தன்னைப் புல்லிடக் கழியை யைந்தும் புணரியாப் புறுமாங் காங்கே. 77. அருந்தமி ழகத்தெப் பாலு மமைந்தநா னிலத்தாங் காங்கே பொருந்திய நடுவண் வானம் புகுதரு மாடக் கோயில் இருந்தனர் தலைவ ரானா ரினத்தொழில் மக்க ளெல்லாம் திருந்திய சிற்றா ராங்கண் திகழ்ந்தனர் புறஞ்சூழ்ந் தம்மா. 78. பேரர சதன்கீழ் மூன்று…
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.71-75
(இராவண காவியம்: 1.2.66-70 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 2. தமிழகப் படலம் 71.குன்றுறை கோட்டி யானை குறுகியே பழனந் தன்னைத் தின் றுசெங் கரும்பைக் கையிற் செழுங்கிளைக் காகக்கொண்டு சென்றிடும் வழியில் வேங்கை செருக்கவக் கரும்பாற்றாக்கி வென் றதை யெயினர் கொள்ள வீசிவே தண்டஞ்சாரும். 72.புல்லிய சுடுவெம் பாலைப் புறாவயல் மருதம் புக்கு நெல்லயின் றேகும் போது நீர்க்கொடி பலவைக் கவ்விச் செல்லவே யிளம்பார்ப் பென்று செருச்செய்தச் சுளைப்பலாவை முல்லையாய்ச் சிறுவர்க் காக்கி முனைப்பொடு பறந்துசெல்லும். அஞ்சிறைப் பொன்காற்…
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.66-70
(இராவண காவியம்: 1.2.61-65 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 2. தமிழகப் படலம் வேறு பசிபட வொருவன் வாடப் பார்த்தினி திருக்குங் கீழ்மை முசிபட வொழுகுந் தூய முறையினை யறிவார் போல வசிபட முதுநீர் புக்கு மலையெனத் துவரை நன்னீர் கசிபட வொளிமுத் தோடு கரையினிற் குவிப்பா ரம்மா. பாணியுஞ் சீருந் தூக்கும் பண்ணொடு பொருந்தச்செங்கை ஆணியுந் திவவுங் கூட் டி யமைத்தயாழ் நரம்பைச் சேர மாணிழைப் பரத்திபாட மகன்றில்கேட் டுவக்கும்பாக்கம் காணிய கலமுள் ளோர்க்குக் கலங்கரை விளக்கங்காட்டும்….