தோழர் தியாகு எழுதுகிறார் 133 : திண்ணியம் தீர்ப்பில் திமிறி வழியும் சாதியம் – இ
(தோழர் தியாகு எழுதுகிறார் 130 : திண்ணியம் தீர்ப்பில் திமிறி வழியும் சாதியம் ஆ. தொடர்ச்சி) திண்ணியம் தீர்ப்பில் திமிறி வழியும் சாதியம் – இ மருத்துவச்சான்று வலுவற்று இருப்பதாக நீதிபதி குறைபட்டுக் கொள்வது பொருளற்றது. தாக்குண்டவர்கள் மருத்துவர்களிடம் அனுப்பி வைக்கப்பட்ட போது காயங்கள் பெரும்பாலும் ஆறிப்போய் இருந்ததில் வியப்பில்லை. ஆனால் முதல் எதிரி சுப்பிரமணியனுக்கு இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 323 / 324 பிரிவுகளில் குற்றத் தீர்ப்பு வழங்குவதற்கு நீதிபதி இதே மருத்துவச் சான்றைத்தான் நம்பியுள்ளார். வழக்குரைஞர்களின் போற்றத்தக்க பணி இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் அச்சத்தைப் போக்கி…
தோழர் தியாகு எழுதுகிறார் 132 : திண்ணியம் தீர்ப்பில் திமிறி வழியும் சாதியம் – ஆ
(தோழர் தியாகு எழுதுகிறார் 131 : திண்ணியம் தீர்ப்பில் திமிறி வழியும் சாதியம் – அ தொடர்ச்சி) திண்ணியம் தீர்ப்பில் திமிறி வழியும் சாதியம் – ஆ காப்பு எதற்கு? உண்மையில் காப்புக் கட்டுவது சமத்துவத்திற்காக அல்ல, மரியாதைக்காகவும் அல்ல. திருவிழா முடியும் வரை யாரும் ஊரை விட்டுப் போகக் கூடாது என்பதற்காகவே இந்த வழக்கம் தொன்று தொட்டு நிலவி வருவது. அப்படியானால் இன்று மட்டுமல்ல, எந்தக் காலத்திலும் தீண்டாமை நிலவியதில்லை என்று சொல்லி விட முடியுமா? காப்புக் கட்டும் வழக்கம் திண்ணியத்திற்கு மட்டும் உரியதல்ல. தமிழ்நாடு முழுக்க இந்த வழக்கம்…
தோழர் தியாகு எழுதுகிறார் 131 : திண்ணியம் தீர்ப்பில் திமிறி வழியும் சாதியம் – அ
(தோழர் தியாகு எழுதுகிறார் 130 : வடவர் வருகையும் தமிழ்நாடும் 5 தொடர்ச்சி) திண்ணியம் தீர்ப்பில் திமிறி வழியும் சாதியம் – அ நீதிபதியிடம் ஒரு கேள்வி இவற்றை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்ப்போம். அதற்கு முன் நீதிபதியிடம் ஒரு கேள்வி: இந்த ஏழு குறைபாடுகளையும் மீறித் தானே முதல் எதிரி சுப்பிரமணியனுக்கு 323, 324 பிரிவுகளில் குற்றத் தீர்ப்பும் தண்டனையும் கொடுத்துள்ளீர்கள்? முதல் எதிரிக்கும் மற்றவர்களுக்கும் எதிரான பிற குற்றச்சாட்டுகளை மெய்ப்பிப்பதற்கு மட்டும் இந்தக் குறைபாடுகள்(?) எப்படித் தடையாகும்? தாமதம் ஏன்? வழக்கிற்குக் காரணமான முதல் நிகழ்ச்சி 2002 மே 20ஆம் நாள் நடைபெற்றது….