மாமூலனார் பாடல்கள் – 20 : சி.இலக்குவனார்
(வைகாசி 11, 2045 / 25 மே 2014 இதழின் தொடர்ச்சி) 20. சென்றோர் அன்பிலர் – தலைவி தலைமகன் பிரிந்த பின்னர், தலைவியை நோக்கிக் கூறுகின்றாள். – சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் தோழி! அவர் அன்பு அற்றவர் என்றுதான் நினைக்கிறேன். உயர்ந்து வளர்ந்துள்ள அடிமரங்களுடைய சிவந்த தளிர் பொருந்திய இருப்பை மரங்களிலிருந்து, தந்தத்தைக் கடைந்து செய்தால்போன்ற பூக்கள் உதிர்ந்துகிடக்கும் அவர் செல்லும் வழிகளில், அங்குக் கரடிக்கூட்டம் – குட்டிகளை ஈன்ற பெண் கரடிகள் – ஆட்டு மந்தையைப்…