பதவி நலன்களுக்காக அடிமையாகிக் கட்சியைச் சிதைக்காதீர்! – இலக்குவனார் திருவள்ளுவன்

பதவி நலன்களுக்காக  அடிமையாகிக் கட்சியைச் சிதைக்காதீர்! “அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்” (ஔவையார், மூதுரை 17) இருப்பவர்களே, அரசியல்வாதிகள் என்பது இன்றைய இலக்கணமாகி விட்டது. எனவே, “ஒருவீர் தோற்பினும் தோற்பதுநும் குடியே”(கோவூர்கிழார், புறநானூறு 45) எனப் பிறர் அறிவுறுத்த வேண்டிய நிலையில் அதிமுக தலைவர்கள் உள்ளனர்.   இயல்பான போக்கில் அதிமுக வளர்ந்தாலும் தளர்ந்தாலும் ஒன்றுமில்லை. ஆனால், அதிகாரச் சுவையைப் பறிப்பதாகவும் தருவதாகவும் அச்சுறுத்தியும் ஆசைகாட்டியும் தமிழர் நலனுக்கு எதிரான ஒரு கட்சி அதனைச் சிதைத்துக் கொண்டுள்ளது. இதனால், அடிமைத்தனத்தின் உச்சக் கட்டத்தில் அதன்…

தினகரன் கைது! – மக்கள் தொடுக்கும் ஐய வினாக்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

தினகரன்  கைது! – மக்கள் தொடுக்கும் ஐய வினாக்கள்!   பொதுவாகக் கையூட்டு பெறுபவரைத்தான் கைது செய்வார்கள். ஆனால், இங்கே அவ்வாறு கையூட்டு பெறுபவரையோ கேட்டவரையோ கைது செய்யவில்லையே! பணம் கொடுத்து இரட்டை இலைச்சின்னத்தை வாங்க முயன்றதாகத்தானே கைது செய்துள்ளார்கள்?  ஒரு வேளை கையூட்டு பெற விருப்பம் இல்லாத ஒருவர், அவரிடம்  யாரும் குறுக்கு வழியில் ஒரு செயலை முடிக்கக் கையூட்டு  தர முயன்றால், அவ்வாறு தர முயல்பவரைப்பற்றிப் புகார் செய்தால் பணம்கொடுக்க முயன்றவரைக் கைது செய்வார்கள்.  இங்கே அவ்வாறு  தேர்தல் ஆணையர் யாரும்…

தினகரன் வெற்றிவாய்ப்பால் நிறுத்தப்பட்ட இடைத்தேர்தல்! – இலக்குவனார் திருவள்ளுவன்

தினகரன் வெற்றிவாய்ப்பால் நிறுத்தப்பட்ட இடைத்தேர்தல்!   அதிமுக தலைவி நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபொழுதே அடுத்த ஆட்சி தம்முடையதுதான் எனக் கனவு கண்டு தலை கால் புரியாமல் குதித்தன பாசகவின் தலைகள். அவர் மறைந்த பின்னர், உடனடியாகத் தம் கைப்பாவையான ஆட்சியை நிறுவினர்.  உண்மை புரிந்து ஆளுங்கட்சி விழித்துக்கொண்டு கைப்பாவையை மாற்றினர். அதன்பின்னரும் பாசக, ஆளுங்கட்சியில் பெரும்பிளவு ஏற்படும் எனக் கனவு கண்டு முயற்சியும் மேற்கொண்டு கானல்நீராய்ப் போனது. இருந்தும் ஆசை யாரை விட்டது? அதிகாரம் கையில் இருக்கும் பொழுது இது கூட முடியாவிட்டால்  இழுக்கென்று…

தமிழகச்சட்டமன்றத்தை ஆங்கிலமன்றமாக்குவோர் மீது நடவடிக்கை தேவை! – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழகச்சட்டமன்றத்தை ஆங்கிலமன்றமாக்குவோர் மீது நடவடிக்கை தேவை!   தமிழ்மக்களுக்கான தமிழ்நாட்டின்சட்டமன்றத்தை ஆங்கில மன்றமாக ஆக்கும் முயற்சியில் தி.மு.க. உறுப்பினர்கள் ஈடுபட்டுவருவது கண்டிக்கத்தக்கது. இது குறித்து அமைதிகாத்து ஆங்கிலக்காவலர்களாக விளங்கும் தி.மு.க. முன்னணியினரும் கண்டிக்கத்தக்கவர்களே! எனவே, விரைவில் தி.மு.க.தலைவர் கலைஞர் மு.கருணாநிதி இவர்களை அழைத்துக் கண்டித்தும் அறிவுறுத்தியும் பொதுவிலும் அறிக்கை விட வேண்டும்.   முதலில் மேனாள் அமைச்சர் பழனிவேல்இராசனின்(P.T.R.) மகன் தியாகராசன் ஆங்கிலத்தில் பேசினார். அடுத்து மேனாள்அமைச்சர் த.இரா.பாலு (T.R.Balu)வின் மகன் இராசா ஆங்கிலத்தில் பேசியுள்ளார்.   இவர்கள் கூறும் சப்பைக்கட்டு, முதல்வருக்கு ஆங்கிலம்…

மரிக்கார் எசு.ராமதாசின் மறைவு கலைத்துறைக்கு ஒரு பேரிழப்பாகும் – இராதாகிருட்டிணன்

மரிக்கார் எசு.ராமதாசின் மறைவு கலைத்துறைக்கு ஒரு பேரிழப்பாகும். மாநிலக்கல்வியமைச்சர் இராதாகிருட்டிணன்     இலங்கையின் முன்னணி நகைச்சுவை நடிகரும் நாடக ஆசிரியருமான மரிக்கார் எசு. இராமதாசு  சென்னையில்  ஆனி 29, 2047 / சூலை 13, 2016 அன்று காலமானார்.    இது குறித்த இரங்கல் செய்தியில் மாநிலக் கல்வியமைச்சர் வே.இராதாகிருட்டிணன் பின்வருமாறு தெரிவித்துள்ளார்:   இலங்கையின் பழம் பெரும் நடிகரான கோமாளிகள் புகழ் மரிக்கார் எசு.இராமதாசின் மறைவு இலங்கைக் கலை உலகிற்கு ஒரு பேரிழப்பாகும். அவருடைய துணிச்சல், அவருடைய ஆளுமை, திறமை, என்பன…