(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 24 : கிழ வயது-தொடர்ச்சி) என் சுயசரிதை 22. தினசரி பட்டி 1928-ஆவது வருடம் நான் நீதிபதி வேலையினின்றும். விலகின பிறகு அநேக நண்பர்கள் “உங்கள் நாட்களை எப்படி கழிக்கிறீர்கள்” என்று கேட்டிருக்கின்றனர். இஃது ஒரு முக்கியமான கேள்வியாம். அநேக உத்யோகத்தர்கள் ஓய்வூதியம் (Pension) வாங்கிக்கொண்ட பிறகு தங்கள் காலத்தை எப்படிக் கழிப்பது என்று திகைத்திருக்கின்றனர். காலத்தைச் சரியாகக் கழிக்கத் தெரியாமல் வீட்டிலேயே மூன்று வேளை சாப்பிட்டு விட்டு மூச்சு விட்டுக்கொண்டிருந்தால் அது ஒருவன் உடல் நலத்திற்குக் கெடுதியைத்தான்…