எழுவர் விடுதலை: முன்விடுதலை என்பது சட்டப்படியானதே! எதிர்ப்பவர்கள் சட்ட மறுப்பர்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன், தினசரி
எழுவர் விடுதலை: முன்விடுதலை என்பது சட்டப்படியானதே! எதிர்ப்பவர்கள் சட்ட மறுப்பர்கள்! இராசீவு கொலை வழக்கில் சிக்கிய எழுவரை விடுதலை செய்வது அநீதியானது; உலகெங்கும் நடைமுறையில் இல்லாதது என்பனபோல் சிலர் கூக்குரலிடுகின்றனர். நீதி மன்றத்திற்குத் தண்டிக்கும் அதிகாரம்மட்டும்தான் உள்ளது. ஒரு நீதிமன்றம் தண்டித்த பின்னர் அதற்கு வேலையில்லை. மேல் முறையீட்டு நீதி மன்றம் தண்டனையைக் குறைக்கலாம் அல்லது மாற்றலாம். ஆனால், தண்டனை வழங்கிய நீதிமன்றத்திற்கு அந்த அதிகாரம் கிடையாது. இறுதிநிலையில் நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற ஒருவரின் வழக்குடனோ வாழ்க்கையுடனோ நீதிமன்றத்தின் தொடர்பு அற்று…