கலைச்சொல்லும் குறளும்: பாராட்டிற்குரிய தலைமைச் செயலரின் அறிவுறுத்தலும் மலரும் பணி நினைவும்- இலக்குவனார் திருவள்ளுவன்
கலைச்சொல்லும் குறளும்: பாராட்டிற்குரிய தலைமைச் செயலரின் அறிவுறுத்தலும் மலரும் பணி நினைவும் தலைமைச்செயலர் முனைவர் வெ.இறையன்பு, முந்நாள் முன்னர் அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தம் வழங்கியுள்ளார். பொதுவான பணி குறித்த அறிவுரையோ கட்டளையோ அல்ல இது. தமிழ் வளர்ச்சிக்கு உதவக் கூடிய, தமிழ் உணர்வைப் பரப்பக்கூடிய நல்லுரை. அவர், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் அன்றாடம் பொருளுடன் கூடிய ஒரு திருக்குறளைக் கட்டாயம் கரும்பலகையில் எழுதிவைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அத்துடன் ஆட்சி சொல்லகராதியில் உள்ள சொற்களில் நாள்தோறும் ஓர் ஆங்கில சொல்லையும் அதற்குரிய…