மூலிகை பேசுகிறது : செம்பருத்தி – ப.கண்ணன்சேகர்
மூலிகை பேசுகிறது : செம்பருத்தி கிழக்காசிய நாடுகளில் தழைத்திடும் தாவரம் கிடைத்தோர்க்கு நலமெனக் கொடுத்திடும் ஓர்வரம் அழகெனப் பூத்திடும் அருமருந்து செம்பருத்தி ஆரோக்கியம் தந்திடும் அன்றாடம் நிலைநிறுத்தி அழகான கூந்தலுக்கு அற்புத மருந்தாகும் அன்புடன் உபசரிக்கும் ஆதிவாசி விருந்தாகும் விழாக்கால வேள்வியிலும் வைத்திடும் பூவாகும் விடியாத நோய்களுக்கும் வெளிச்சமென தீர்வாகும் விதையில்லாப் பதியத்தால் விளைந்திடும் செடியாகும் வேர்இலை பூக்களால் வரும்நோயும் பொடியாகும் சிதையாமல் பூவிதழை சுடும்பாலில் நனைத்திடு சிவந்திடும் பாலினை அன்றாடம் அருந்திடு பதைத்திடும் பதற்றத்தைப் பக்குவமாய்க் குறைத்திடும் பலமூட்டி இரத்தத்தை …
தமிழெனப் பொங்கிடு! – ப.கண்ணன்சேகர்
தமிழெனப் பொங்கிடு! உழைத்திடப் பொங்கிடு! உரிமைக்குப் பொங்கிடு உதவிடப் பொங்கிடு ஊருக்குப் பொங்கிடு தழைத்திடப் பொங்கிடு தமிழெனப் பொங்கிடு தருமத்தைப் பொங்கிடு தளராது பொங்கிடு பிழையறப் பொங்கிடு பெருமையாய்ப் பொங்கிடு பிணக்கிலாப் பொங்கிடு பார்போற்றப் பொங்கிடு மழையெனப் பொங்கிடு மலரெனப் பொங்கிடு மதமிலாப் பொங்கிடு மனிதனாய்ப் பொங்கிடு இயற்கையோடு பொங்கிடு இரக்கதோடு பொங்கிடு இணக்கமெனப் பொங்கிடு எழிலாகப் பொங்கிடு தயங்காமல் பொங்கிடு தவறாது பொங்கிடு தடுக்காமல் பொங்கிடு தணிந்திடப் பொங்கிடு வியந்திடப் பொங்கிடு விடுதலைக்குப் பொங்கிடு வேளாண்மை பொங்கிடு வெற்றியால் பொங்கிடு சுயமாகப்…
சல்லிகட்டுக்குத் தடையா? – ப.கண்ணன்சேகர்
சல்லிகட்டுக்குத் தடையா? சூரப்புலி பாய்ந்திடத் துரத்தினாள் முறத்தாலே சுவைத்தமிழ் இலக்கியம் வீரத்தை ஊட்டுமே! போரிடும் களத்திலே புறமுதுகைக் காட்டாத பெற்றமகன் வீரத்தைப் பெருமையெனக் காட்டுமே! வீரத்தமிழ் இனத்தினை விளையாட்டு பொம்மையென வேடிக்கை பார்த்திடும் வீணர்களின் கூட்டமே! ஓரவஞ்சச் செயலாலே ஒடுங்காது தமிழினம் வாக்களிக்கும் மக்களால் ஒடுங்கிடும் ஆட்டமே! ஏறுதழுவு விளையாட்டால் எங்களது வீரத்தை இவ்வுலகம் கண்டிட இரக்கமற்ற தடையேனோ? பேருபெற்ற தமிழரின் பாரம்பரிய விழாவினைக் கூறும்போடும் குரங்கெனக் கொள்கையே முறைதானோ? வேருவிட்ட ஆர்ப்பாட்டம் வீழ்த்திட நினைப்பது வீட்டுக்குள் அணுகுண்டு வைப்பதும் சரிதானோ! ஊருக்கு ஊரெலாம்…
குருதிக்கொடை என்னும் அறம் – ப.கண்ணன்சேகர்
குருதிக்கொடை என்னும் அறம் நதிநீர் ஓட்டத்தால் நாடெலாம் செழித்திட நாளத்தின் குருதியால் நன்னுடல் தழைத்திடும்! அதிகாலைப் பயிற்சியால் ஆரோக்கியம் கண்டிட அழற்சியிலா உடலே அன்றாடம் உழைத்திடும்! விதியினை மாற்றியே வீழ்வதைத் தடுத்திட வெள்ளையோடு சிவப்பணு வேரெனக் காத்திடும்! நிதிபடைத்து நானிலத்தில் நிம்மதி காண்போரும் நிச்சயமாய்க் குருதியால் நலவாழ்வு வந்திடும்! உடல்முழுக்கப் பிராணத்தை உந்தும்நிலை செய்திட உதவுகிற பெரும்பணியே ஓடுகின்ற இரத்தமே! முடக்கிடும் கிருமிகளை முற்றிலும் அகற்றிட முதன்மைச் சேவகனாய் முயன்றிடும் இரத்தமே! திடமென இதயத் தெளிவான ஓட்டத்தை தினந்தோறும் தருவதும் தேகத்தில் இரத்தமே! மடமை…
அன்றாடம் வணங்கியே அடிதொழும் நம்கரம்! – ப.கண்ணன்சேகர்
அன்றாடம் வணங்கியே அடிதொழும் நம்கரம்! புதுவையின் குயிலோசை புவியெலாம் ஒலித்திட புரட்சிக்கவி வண்ணத்தில் பொலிவென வந்தது! மதுமதி கலையென மனங்களும் சுவைத்திட மலர்ந்திட்ட கவிதையோ மயக்கத்தைத் தந்தது! எதுகையும் மோனையும் இலக்கியத் தமிழினில் எண்ணற்ற கவிதைகள் எண்ணத்தில் நின்றன! பதுமையின் பாவலர் பாடிய விடுதலை பாய்ந்திடும் அம்பென பழமையை வென்றது! பாரதியின் தாசனே பைந்தமிழின் நேசனே புதியதோர் உலகுசெய்ய புறப்பட்ட தமிழனே! பேராதிக்க வெறியினை பெயர்த்தெடுத்த எழுத்தாணி பொழிந்திட்ட காவியங்கள் புரட்சிகர அமிழ்தமே! வேரினில் பழுத்தபலா விதவையர் எனச்சொன்ன வாழ்வியல் கவிதைகள் வைரத்தின் மகுடமே!…