தியாகு எழுதுகிறேன்….தாழி மடல் (21.அ.): மாவீரர்களின் பெயரால்…
தியாகு எழுதுகிறேன்….தாழி மடல் (21. அ.): மாவீரர்களின் பெயரால்… ஆண்டுதோறும் தமிழீழ மாவீரர் நாளில் புவிப்பரப்பெங்கும் தமிழர் வாழும் நாடுகளில் எல்லாம் மாவீரர்களின் நினைவு போற்றப்படுகிறது. தமிழ் மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி, செஞ்சுடர் ஏந்தி, நெஞ்சுருகப் புகழ்வணக்கப் பாடல் பாடி அந்த வீர வித்துகளை நினைவு கூர்கின்றார்கள். 2009 மே முள்ளிவாய்க்கால் பெரும்படுகொலைக்கு முன் 1989 முதல் 2008 முடிய ஒவ்வோராண்டும் தலைவர் பிரபாகரன் மாவீரர் நாள் உரை நிகழ்த்துவது வழக்கமாக இருந்தது. இந்த உரைகள் ஒவ்வொன்றும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்று ஆவணமாகும். ஏற்றவற்றங்கள் நிறைந்த விடுதலைப் போராட்டப் பாதையில் ஒவ்வொன்றும் ஒரு கைவிளக்காக ஒளியூட்டும். இப்போதும்…
தியாகுவின் அரசியல் வகுப்பு 87
சமற்கிருதம் செம்மொழியல்ல: இணையவழி உரையரங்கம்,14.02.2021
“இலங்கையைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம்!” – கி. வேங்கடராமன்
“இலங்கையைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம்!” ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வேங்கடராமன் பேச்சு! “இலங்கையைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம்!” என ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வேங்கடராமன் பேசினார். “இந்திய அரசே! இனக்கொலை இலங்கைக்குத் துணை போவதை நிறுத்து! இலங்கையைக் கூண்டிலேற்றத் தீர்மானம் கொண்டு வா!” என்ற கோரிக்கையுடன், ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில், மாசி 21, 2048 – 05.03.2017 மாலை, சென்னை வள்ளுவர்…
மாட்டு அரசியலும் மாற்று அரசியலும் – ஆய்வரங்கம்
ஐப்பசி 01, 2046 / அக்.18, 2015 மாலை 3.00 சென்னை
பன்னாட்டு நீதிப் பொறிமுறை வேண்டும் கூட்டறிக்கை
ஈகச் சுடர் திலீபன் நினைவு நாளில் (2015 செப்டம்பர் 26) ஒரு கூட்டறிக்கை இருபத்தெட்டு ஆண்டுகள் முன்பு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தாலும் இந்தியப் படையிறக்கத்தாலும் தமிழீழ விடுதலைப் போராட்டம் சந்தித்த நெருக்கடியை வெற்றி கொள்ளச் சொட்டு நீரும் அருந்தாமல் பட்டினிப் போர் புரிந்து இன்னுயிர் தந்த திலீபன் நினைவாக – திலீபனின் 28 ஆவது நினைவு நாளான சென்ற 26.09.2015 அன்று மாலை 6 மணியளவில் சென்னை தியாகராய நகரிலுள்ள செ. தெ. தெய்வநாயகம் பள்ளியில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் நடத்திய “வேண்டும்…
வேண்டும் பன்னாட்டு நீதிப் பொறிமுறை – த.தே.வி.இ.கருத்தரங்கம்
திலீபன் 28ஆவது நினைவுநாள் கருத்தரங்கம் இருபத்தெட்டு ஆண்டு காலம் முன்பு தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டம் இந்தியத் தலையீட்டால் நெருக்கடிக்கு உள்ளான போது சொட்டு நீரும் அருந்தாத பட்டினிப் போராட்டத்தில் உயிர் தந்து தடை நீக்கிய ஈகச்சுடர் திலீபன் நினைவு நாளில் …. இன்று சிங்கள-அமெரிக்க-இந்தியக் கூட்டுச் சதியால் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் தமிழீழ மக்களின் நீதிப் போராட்டத்தில் அடுத்துச் செய்ய வேண்டியது என்ன? என்ற வினாவிற்கு விடைதேடும் கருத்தரங்கினை தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் சார்பில் நடத்துகின்றோம். திலீபன் நினைவை நெஞ்சில் சுமந்து……