தமிழர்கள் இம்மண்ணின் மைந்தர்கள்
தமிழர்கள் இம்மண்ணின் மைந்தர்கள் திராவிடர்கள் வெளிநாட்டிலிருந்து வந்து இந்தியாவிற்குள் நுழைந்தவர்கள் என்பது உண்மை அறியா மாந்தரின் கற்பனையுரையேயாகும். திராவிட நாகரிகமும் பண்பாடும் இந்நாட்டு மண்ணிலேயே முளைத்து எழுந்து, தழைத்து, வளர்ந்து பல விழுதுகள் விட்டு முதிர்ந்த பேராலமரமாகும். – இந்தியக் கலை-பண்பாடுகள் – தமிழ்ச்சிமிழ்