தமிழ்ப்புத்தாண்டு, முத்தமிழ் மன்றம்
பெரியார் விருது வழங்கும் விழா தை 2, 3, 4 – 2046/ சன.16,17,18 – 2015
தமிழர்திருநாளா? மகர சங்கராந்தியா? திராவிடர் திருநாளா?
உழவர் திருநாள், அறுவடைத் திருநாள் என்றெல்லாம் சிறப்பிக்கப்படும் பொங்கல் திருநாள் தமிழர் திருநாள் என்பதிலே ஐயமில்லை. இந்திய நிலப்பகுதி முழுவதும் ஒரு காலத்தில் தமிழ்நாடாக இருந்தமையால் இன்றைய இந்தியா முழுவதும் இவ்விழா கொண்டாடப்படுகின்றது. (தமிழோடு தொடர்புடைய சப்பான் முதலான ஆசிய நாடுகளிலும் கொண்டாடப்படுகின்றது.) ஆனால், அவ்வாறு கொண்டாடப்படும் இடங்களில் பேசும் மொழியும் சிதைந்து உருமாறிப் புது மொழியானமையால், அங்கே பொங்கல் நன்னாளின் பெயர் சங்கராந்தி அல்லது சங்கிராந்தி, உத்தராயண், (உ)லோரி, மகரவிளக்குத் திருவிழா, மாகி, மாகே சங்கராந்தி அல்லது மாகே சகாராதி என்பனபோல் …