திருக்குறளுக்கு உரை திருக்குறளே! 1/9       பின்பலம் இன்றிக் குறளாசான் தன்பலம்      பின்புலமாய்க் கொள்ளுமென் ஆய்வு முப்பாலுக்கு உரைகள் பல உள. சில உரைகள் நல்ல விளக்கம் தருகின்றன. பல உரைகள் குழப்பம் தருகின்றன. முப்பாலுக்குத் திருவள்ளுவர் உள்ளத்தை எதிரொலிக்கும் பொருள் காண நற்றுணை ஆவது திருவள்ளுவமே என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன்  மேற்கொள்ளப் படுவது  இந்த ஆய்வு. ஃபிரான்சு நாட்டில் அகாதெமி ஃபிரான்செசு என்ற ஓரமைப்பு உள்ளது. அந்த அமைப்பின் அனுமதியின்றி எந்த ஒரு புதுச்சொல்லும் ஃபிரெஞ்சு அகராதியில் நுழைய முடியாது. ஆனால்…