திருக்குறளைப் போற்றுவோர் தமிழையும் போற்றுக! இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி
திருக்குறளைப் போற்றுவோர் தமிழையும் போற்றுக! தமிழைப் போற்றாமல் திருக்குறளையோ பிற இலக்கியங்களையோ போற்றிப் பயனில்லை. இங்கே கூறப்படுவது அனைத்து விழா ஏற்பாட்டாளருக்கும் பொதுவானது. இருப்பினும் திருக்குறள் மாநாட்டை அளவீடாகக் கொண்டு பார்ப்போம். கருத்தரங்கத்தில் தமிழ் தொலைக்கப்படுவதைக் காணும் பொழுது இரத்தக் கொதிப்பு வருகிறதே! ஆகச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. இவ்வமைப்பினர் நடத்தும் அழைப்பிதழ் பதாகைகள் முதலான எவற்றிலும் தமிழ் இல்லை. தமிழ் நூல் குறித்த தமிழர் நடத்தும் மாநாடுகளில் அல்லது கருத்தரங்கங்களில் தமிழ் இல்லை என்பது தலைக்குனிவு அல்லவா? புது தில்லியில் அதே…