திருக்குறள் சான்றோர் இலக்குவனார் திருவள்ளுவன் 2/2 – பேரா. வெ.அரங்கராசன்
(திருக்குறள் சான்றோர் இலக்குவனார் திருவள்ளுவன் 1/2 தொடர்ச்சி) திருக்குறள் சான்றோர் இலக்குவனார் திருவள்ளுவன் 2/2 வருணாசிரம எதிர்ப்புக் குறள் விளக்கங்கள் இலக்குவனார் திருவள்ளுவன் தரும் குறள் விளக்கங்களிலேயே புரட்சியும் புதுமையும் கொண்ட திருவள்ளுவர் உள்ளத்தைப் படம் பிடித்துக் காட்டுவது, கடவுள் வாழ்த்து குறள்களுக்கு அவர் தரும் விளக்கங்கள் ஆகும். வருணாசிரமக் கொள்கையை எதிர்த்தே திருவள்ளுவர் முதல் அதிகாரத்தை அளித்துள்ளார் என்கிறார். வருணாசிரமப்படித் தலையில் பிறந்ததாக அவர்கள் சொல்பவர்கள் உயர்வானவர்கள், காலில் பிறந்ததாக அவர்கள் சொல்பவர்கள் கீழானவர்கள். ஆனால் திருவள்ளுவர் 7 குறட்பாக்களில் தாளைத் தலைதான்…