திகைக்கச் செய்யும் திருக்குறள் திலீபன்:   நினைவாற்றல் பயிலரங்கம் தேவகோட்டை: தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் திருக்குறள் தீலீபனின் நினைவாற்றல் பயிலரங்கம் நடைபெற்றது.     இந்நிகழ்ச்சிக்கு வந்தவர்களை ஆசிரியர் சிரீதர் வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர்  இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். காரைக்குடி தங்கசாமி,    நடராசபுரம் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.    திருக்குறள் தீலீபன் மாணவர்களின் முன்பு “புராணக்கால வரலாற்றிலிருந்து காணப்படும் பலவகைக் கலைகளுள் நினைவாற்றலை மனத்தில் நிறுத்தி அதைக் கவனத்தில் கொண்டு, மீண்டும் நினைவுபடுத்திக் கூறும்…